NPS Vatsalya Scheme: நாட்டு மக்களுக்கு மற்றொரு பயனுள்ள நலத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். இதன் மூலம், நீண்ட கால முதலீட்டின் மூலம், சிறார்களின் எதிகாலத்திற்கு ஒரு பெரிய கார்பஸ் தொகையை உருவாக்க முடியும். இதன் பயனாக, அவர்களது எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்பானதாக இருக்கும்.
சிறார்களுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், இதுவரை ஓய்வூதிய பலன்களில் சேர்க்கப்படாத வயதினரையும் இனி ஓய்வூதிய பலன்களுடன் சேர்த்துக் கொள்ள முடியும். இது சிறார்களின் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை அளிக்கும்.
NPS Vatsalya என்றால் என்ன?
என்.பி.எஸ் வாத்சல்யா என்பது என்.பி.எஸ் -இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, நீட்டிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த திட்டத்தில், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சிறார்களுக்காக என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம்.
இந்த திட்டம் பற்றி கூறிய PFRDA தலைவர் தீபக் மொகந்தி, "குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிதி சுதந்திரத்துக்கான உணர்வு உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக இந்த சுதந்திரத்தை அளிக்க முடியும். குழந்தைகள் தகுதியான வயது வரம்பை அடைந்தவுடன், என்பிஎஸ் வாத்சல்யா கணக்கு வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) மாற்றப்படும். அதன் பிறகு அது அவரது பணிக்கு ஏற்ப அப்படியே அவருடன் தொடரும்” என்று கூறினார்.
இந்தத் திட்டத்தில் ஒருவர் மொத்தமாகவோ அல்லது மாதாந்திர முதலீடாகவோ முதலீடு செய்யலாம். சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த திட்டத்தில், குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு ரூ. 1,000 ஆகும். சிறாருக்கு 18 வயது ஆனதும் கணக்கு சாதாரண NPS கணக்காக மாற்றப்படும். அவர்கள் 75 வயதாகும் வரை தங்கள் NPS கணக்கில் தொடர்ந்து பங்களிக்கலாம்.
என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்: முக்கிய அம்சங்கள்:
- என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் மோடி அரசாங்கத்தின் ஒரு புதிய திட்டமாகும்.
- குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பிற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு குழந்தைகளின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பங்களிப்பார்கள் என்று நிதியமைச்சர் (Finance Minister) தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
- குழந்தைகள் தேவையான வயதை எடியவுடன், இந்தத் திட்டத்தின் கணக்கை வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) எளிதாக மாற்றலாம்.
- என்பிஎஸ் வாத்சல்யா நெகிழ்வான பங்களிப்பு மற்றும் முதலீட்டு வசதிகளை வழங்குகிறது.
- இந்த திட்டத்தில் பெற்றோர்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
- இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இயங்கும்.
மேலும் படிக்க | EPS ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கிடைக்கும் பல வகையான ஓய்வூதியங்கள்: முழு லிஸ்ட் இதோ
NPS Vatsalya: தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை மூலம் NPS இல் பதிவு செய்தால், சிறார்களுக்கு இந்த ஆவணங்கள் தேவைப்படும்:
- மைனரின் பிறந்த தேதி சான்று (Date of Birth Proof of Minor)
- கார்டியன் கையொப்பம் (Guardian Signature)
- பாஸ்போர்ட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (என்ஆர்ஐ சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்) (Scanned Copy of Passport)
- வெளிநாட்டு முகவரிச் சான்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (OCI சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்) (Scanned copy of Foreign Address Proof)
- வங்கிச் சான்றுகளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (என்ஆர்ஐ/ஓசிஐ சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்) (Scanned copy of Bank Proof).
மேலும் படிக்க | உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ