அட்டகாசமான அப்டேட்: PF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம்

EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) தற்போதைய ஊதிய உச்ச வரம்பு மாதம் ரூ.15,000 ஆக உள்ளது. இது 2014 -இல் ரூ.6,500 ஆக இருந்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2024, 01:34 PM IST
  • EPFO சம்பள வரம்பு மீண்டும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
  • புதிய EPFO ​​பங்களிப்பு வரம்பு எப்படி இருக்கும்?
  • திருத்தப்பட்ட ஊதிய உச்சவரம்பால் EPFO ​​வட்டித் தொகை எவ்வளவு அதிகரிக்கும்?
அட்டகாசமான அப்டேட்: PF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம் title=

EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிட அப்டேட் கிடைக்கக்கூடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவற்றிற்கு சந்தாதாரர்கள் செலுத்தும் பங்களிப்புகளின் ஊதிய உச்ச வரம்பை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஊதிய வரம்பு

இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) தற்போதைய ஊதிய உச்ச வரம்பு மாதம் ரூ.15,000 ஆக உள்ளது. இது 2014 -இல் ரூ.6,500 ஆக இருந்தது. இந்த சம்பள வரம்பு இப்போது மீண்டும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி

சம்பளம் பெறும் ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து இபிஎஃப் கணக்கில் (EPF Account) 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு  தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. மாதா மாதம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் ஊழியர்கள் இதில் டெபாசிட் செய்யலாம். இருப்பினும், முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இதில் 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்படுகிறது, மீதமுள்ள 3.67% வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.

உதாரணமாக, ஒருவரது சம்பளம் மாதம் ரூ.15,000 என்றால், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு ரூ.1,800 ஆக இருக்கும். நிறுவனம் தரப்பில் செய்யப்படும் பங்களிப்பில், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு ரூ.550.50 ஆகவும் EPS பங்களிப்பு ரூ.1,249.5 ஆகவும் இருக்கும்.

புதிய EPFO ​​பங்களிப்பு வரம்பு எப்படி இருக்கும்?

- ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling) அரசாங்கம் ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

- அப்படி நடந்தால், ரூ.21,000 சம்பளத்தில், ஊழியர் பங்களிப்பு ரூ.2,520 ஆக இருக்கும்.

- நிறுவனத்தின் பங்களிப்பு EPF -​​க்கு ரூ.770.70 ஆகவும் EPS -க்கு ரூ.1,749.30 ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க | Important Announcement | ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!

Wage Ceiling Hike: திருத்தப்பட்ட ஊதிய உச்சவரம்பால் EPFO ​​வட்டித் தொகை எவ்வளவு அதிகரிக்கும்?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 

ஒரு நபர் 23 வயதில் EPFO ​​திட்டத்தில் சேர்ந்து, 35 ஆண்டுகளுக்கு இபிஎஃப் தொகைக்காக (EPF Amount) ரூ.15,000 என்ற அடிப்படை ஊதியத்துடன் பங்களிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் மொத்தமாக ரூ.71.55 லட்சத்தை கார்ப்பஸ் தொகையாகப் பெறுவார். இதில் கூட்டு வட்டித் தொகை ரூ.60.84 லட்சமாக இருக்கும். அந்த நபரின் மொத்த பங்களிப்பு ரூ.10.71 லட்சமாக இருக்கும். ஆண்டுக்கு 8.25% என்ற வட்டி விகிதத்தில் கணக்கீடு செயப்பட்டுள்ளது. 

ஊதிய வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், மொத்த கார்ப்பஸ் ரூ.1 கோடியை எட்டும். முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.15 லட்சமாகவும், வட்டித் தொகை ரூ.85 லட்சமாகவும் இருக்கும். அதாவது ரூ.21,000 சம்பளம் என்ற ஊதிய உச்சவரம்பில், இபிஎஃப் உறுப்பினர்கள் கூடுதலாக ரூ.28.45 லட்சம் சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News