SmilePay: மக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் விதம் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருகின்றது. தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் பண பரிமாற்றம் செய்யும் முறைகளிலும் பல வித வசதிகள் எற்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது பண பரிமாற்றம் செய்ய மேலும் ஒரு புதிய வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபெடரல் வங்கி


பெடரல் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது முக்கியமான செய்தியாக இருக்கும். தனியார் துறை வங்கியான ஃபெடரல் வங்கி, "ஸ்மைல்பே" (SmilePay) என்ற முக கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் கேமராவைப் பார்த்து சிரித்தே பணம் செலுத்த முடியும். இந்தச் சேவை அமலுக்கு வந்த பின், கட்டணங்களை செலுத்தவும், பரிவர்த்தனைகளுக்கும், ரொக்கமாக பணம், கார்டுகள் அல்லது மொபைல் போன்களுக்கான தேவை இருக்காது. ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் அனன்யா பிர்ட்லாவின் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இந்த சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 


முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது


முன்னோடி திட்டமாக (Pilot Project) தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. BHIM Aadhar Pay அமைப்பின் அடிப்படையில், இது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் இருந்து பணம் பெற பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்துகிறது. UIDAI வழங்கும் முழுப் பாதுகாப்பான முக அங்கீகார முறையை (Facial Recognition System) இது பயன்படுத்தும் என்று இந்த அமைப்பு பற்றி வழங்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


SmilePay என்றால் என்ன?


'ஸ்மைல்பே என்பது நாட்டிலேயே இந்த வகையிலான முதல் கட்டண முறை ஆகும். இது UIDAI இன் BHIM Aadhar Pay அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துகிறது. SmilePay பயனர்களின் முகத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்த உதவுகிறது.' என ஃபெடரல் வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- இந்த புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் கார்டு அல்லது மொபைல் சாதனங்கள் இல்லாமலேயே வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியும். 
- இதில் முழு பரிவர்த்தனை செயல்முறையும் இரண்டே கட்டங்களில் முடிக்கப்படும். 


பணம், கார்டுகள் மற்றும் QR குறியீடு செலுத்துதல்களுக்குப் பிறகு, புன்னகைத்து பணம் செலுத்தும் செயல்முறை மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளதாக ஃபெடரல் வங்கியின் சிடிஓ, இந்திரணில் பண்டிட் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதிய அம்சத்தை மக்கள் பெரிதும் பாராட்டுவார்கள் என்று அவர் நம்பிக்கையும் தெரிவித்தார்.


SmilePay: அம்சங்கள் மற்றும் நன்மைகள்


- SmilePay மூலம் நீங்கள் பணம், கார்டுகள் அல்லது மொபைல் சாதனத்தை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லாமலேயே பரிவர்த்தனைகளை முடிக்க முடியும். 
- கவுண்டர்களில் அதிகரிக்கும் கூட்டத்தை குறைக்கவும் இந்த சேவை உதவும். 
- பாதுகாப்பான UIDAI முக அங்கீகார சேவையின் அடிப்படையில், பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும் நம்பகமானதாகவும் இருக்கும். 
- SmilePay அம்சம் பெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
- இந்த சேவையை பயன்படுத்த வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் இந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்காலத்தில் இந்த சேவையை விரிவுபடுத்தவும் பெடரல் வங்கி திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க | செப்டம்பர் 1, 2024: ஆதார், எல்பிஜி, அகவிலைப்படி..... இந்த மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள், முழு விவரம் இதோ


SmilePay மூலம் பணம் செலுத்துவது எப்படி:


- FED MERCHANT செயலியை நிறுவவும்: 
உங்கள் மொபைல் சாதனத்தில் FED MERCHANT செயலி இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். இந்த செயலி இல்லை என்றால், இதை டவுன்லோட் செய்துகொள்ளவும்.


- செக் அவுட்டில் SmilePay -ஐத் தேர்ந்தெடுக்கவும்: 
நீங்கள் பணம் செலுத்தத் தயாரானவுடன், ​​உங்கள் கட்டண விருப்பமாக SmilePay -ஐத் தேர்ந்தெடுக்கவும்.


- வணிகர் பணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்குவார்:
வணிகர் உங்கள் ஆதார் எண்ணை FED MERCHANT செயலியில் உள்ளிடுவார்.


- ஃபேஸ் ஸ்கேன்: 
வணிகரின் மொபைல் கேமரா உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து UIDAI இன் முக அங்கீகாரத் தரவுடன் பொருத்தும்.


- கட்டணச் செயலாக்கம்: 
ஸ்கேன் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், கட்டணம் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.


- நிதி பரிமாற்றம்: 
தொகை உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு வணிகரின் பெடரல் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.


- உறுதிப்படுத்தல்: 
பணம் செலுத்தப்பட்டவுடன் FED MERCHANT செயலி அதை உங்களுக்குத் தெரிவிக்கும்.


மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் Rs 6,000, Rs 8,000, Rs 12,000 மாத பங்களிப்புக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ