செப்டம்பர் 1, 2024: ஆதார், எல்பிஜி, அகவிலைப்படி..... இந்த மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள், முழு விவரம் இதோ

Major Changes From September 1 2024: வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ நம் மீது இருக்க வாய்ப்புள்ளது.

Major Changes From September 1 2024: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல வித முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை பற்றிய புரிதலும் தெளிவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் நமக்கு வரக்கூடிய தேவையற்ற சில சிக்கல்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்கலாம். அந்த வகையில், செப்டம்பர் 1 ஆம் தேதியான, அதாவது இன்று முதல், பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்? இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

1 /9

இன்று செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இன்று முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் நிச்சயமாக இருக்கும். இன்று முதல் அமலுக்கு வந்துள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /9

UIDAI இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான காலக்கெடுவை செப்டம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களது ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க அதிக நேரம் கொடுத்துள்ளது. ஆதார் தொடர்பான எந்த வித புதுப்பிப்பையும் செப்டம்பர் 14, 2024 வரை மட்டுமே இலவசமாக செய்ய முடியும். இதற்குப் பிறகு, இதுபோன்ற புதுப்பிப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக, ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி 14 ஜூன் 2024 ஆக இருந்தது. தற்போது இது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3 /9

இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய விலை உயர்வுக்குப் பிறகு சென்னையில் எல்பிஜி வணிக சிலிண்டர் விலை 1855 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1652.50ல் இருந்து ரூ.1691.50 ஆகவும், கொல்கத்தாவில் வணிக ரீதியான சிலிண்டரின் விலை ரூ.1764.50ல் இருந்து ரூ.1802.50 ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.1605 -இலிருந்து ரூ.1644 ஆகவும் அதிகரித்துள்ளது. 

4 /9

UPI பரிவர்த்தனைகளின் போது RuPay கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் அம்சங்கள், வெகுமதி புள்ளிகள் மற்றும் நன்மைகள் குறைந்தபட்சம் நிலையான கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யுமாறு NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒழுங்குமுறை, அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் சமமான சலுகைகள் மற்றும் இழப்பீடுகளை நிர்வகிக்கும். 

5 /9

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் டெலிமார்க்கெட்டிங் சேவைகளை பிளாக்செயின் அடிப்படையிலான அமைப்பிற்கு படிப்படியாக மாற்றத் தயாரானது. இதன் மூலம் அதிகரித்து வரும் ஸ்பேம் செய்திகள் மற்றும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கையைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் பாதுகாப்பு அதிகரித்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறையும்.

6 /9

பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான ரிவார்டு பாயிண்டுகளுக்கு HDFC வங்கியின் கட்டுப்பாடு காரணமாக, சில சேவைகளுக்காக பணம் செலுத்தும் கார்டுதாரர்கள் குறைவான பலன்களைப் பெறலாம். கூடுதலாக, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் அதன் கட்டண அட்டவணையில் திருத்தம் செய்ததன் விளைவாக அட்டைதாரர்களின் கட்டணச் செயலாக்க தேதிகள் மற்றும் முறைகள் மாறலாம். கிரெடிட் கார்டுகளின் பயனர்கள் வெகுமதிகளைத் (Reward Points) தவறவிடுவதைத் தடுக்க அல்லது எதிர்பாராத அபராதங்களைத் தடுக்க இந்த மாற்றங்களை பற்றி தெரிந்துகோள்ள வேண்டும்.

7 /9

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறுவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 3% அல்ல்லது 4% அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 53% அல்லது 54% ஆக உயரும். 

8 /9

செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான செப்டம்பர் 1ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் காலை 6 மணிக்கு வெளியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

9 /9

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல வித முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை பற்றிய புரிதலும் தெளிவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் நமக்கு வரக்கூடிய தேவையற்ற சில சிக்கல்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்கலாம்.