EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு கணிசமான ஓய்வூதிய நன்மைகளை அளிக்கின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தை நிர்வகிக்கிறது. இதில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பினரும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கிறார்கள்.
ஓய்வூதிய பலன்களுக்கான திட்டம்
EPF சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டமாகும். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அது EPFO-ன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது அந்த ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு (EPF Account) திறக்கப்பட்டு, அவர்கள் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Memebers) ஆக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு மாதாந்திர ஓய்வூதிய வடிவில் மொத்த ஓய்வூதியத்தை (Pension) வழங்குகிறது.
முதலாளி / நிறுவனம் மூலம் பங்களிக்கப்படும் தொகை குறைந்தபட்சம் ரூ. 1,800 இருக்க வேண்டும். ஊழியரின் ஊதியத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் மாதா மாதம் 12% இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. பணியாளர்களின் பங்களிப்பு முழுவதுமாக EPF கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் ஊழியரின் EPF கணக்கிலும், 3.67 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS) செல்கின்றது.
மேலும் படிக்க | UPI: புத்தம் புதிய வசதியை அறிமுகம் செய்தது NPCI.. பண பரிமாற்றம் இன்னும் சுலபமானது!!
EPFO Interest Calculator: ரூ.6,000, ரூ.8,000 மற்றும் ரூ.12,000 மாதாந்திர EPF பங்களிப்புகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
- 15 வருடங்கள் தொடர்ந்து EPF இல் ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 முதலீடு செய்தால், 8.25 சதவீத வட்டி விகிதத்தில் (Interest Rate) முதிர்வு காலத்தில் ரூ.21,57,867.30 கிடைக்கும்.
- இதேபோல், 15 ஆண்டுகள் தொடர்ந்து EPF கணக்கில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 8.25 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் ரூ.28,77,156.4 கிடைக்கும்.
- 15 ஆண்டுகள் தொடர்ந்து EPF கணக்கில் இல் மாதம் ரூ.12,000 முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது 8.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.43,15,734.6 கிடைக்கும்.
EPFO Balance Check: இபிஎஃப் கணக்கில் உள்ள வட்டித் தொகை மற்றும் பிஎஃப் இருப்புத் தொகையை செக் செய்வது எப்படி? இதற்காக முழு செயல்முறையை இங்கே காணலாம்
- முதலில் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) www.epfindia.gov.in என்ற EPFO போர்ட்டலுக்குச் செல்லவும்.
– E-PassBook ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
- இதன் பிறகு மற்றொரு ஸ்க்ரீன் உங்கள் முன் தோன்றும்.
- இங்கு உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- வெற்றிகரமாக லாக் இன் செய்த பிறகு, பாஸ்புக்கிற்கான உறுப்பினர் ஐடி (Member ID) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பாஸ்புக் PDF வடிவத்தில் கிடைக்கும்.
- அதை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- https://passbook.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் பாஸ்புக்கை நேரடியாக அணுகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ