EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு வலுவான நிதி பாதுகாப்பை அளிக்கும் ஒரு திட்டமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நடத்தப்படும் இந்த திட்டம், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, மாதாந்திர ஓய்வூதிய வடிவில் ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. இது அரசாங்கத்தால் 1952 இல் நிறுவப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF: வட்டி விகிதம்


EPF அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் மாதா மாதம் பணியாளர்கள் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. தற்போது இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள தொகைக்கு அரசாங்கம், 8.25% ஆண்டு வட்டியை அளிக்கின்றது.  


EPF: இதில் பணம் டெபாசிட் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?


EPF -இல் பணத்தை டெபாசிட் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமான சில பலன்கள் இதோ:


- பணி ஓய்வின் போது நிதி ஸ்திரத்தன்மை.
- ஓய்வுக்குப் பிறகு ஒரு முறை முதலீடு தேவை. 
- ஊழியர் ஓய்வு பெறும்போது பெரிய கார்பஸை பெறுவதற்கு மாதாந்திர முதலீடு செய்ய வேண்டும்.
- அவசர காலங்களில் இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும்.
- உங்கள் சேவைக் காலத்திலும் இந்த தொகையை எடுக்கலாம். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு


EPFO திட்டங்கள்:


EPFO முக்கியமான 3 திட்டங்களை நிர்வகித்து வருகின்றது


- EPS: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees' pension scheme)
- EPF: பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (Employees' provident fund scheme )
- EDLI: ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employees' Deposit Linked Insurance Scheme)


EPFO -இல் கிடைக்கும் சேவைகள்


- ஆன்லைன் பதிவு
- இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஆன்லைனிலேயே UAN விவரங்களை உருவாக்கலாம்
- EPF சந்தாவை ஆன்லைனில் செலுத்தலாம்
- ஆன்லைன் EPF சலான்
- குறைகளை நிவர்த்தி செய்யவதற்கான தளம்
- ஆன்லைனிலேயே க்ளெய்ம்களை மாற்றலாம், அதாவது டிரான்ஸ்ஃபர் செய்யலாம். 


Retirement Corpus Calculator: 


EPF மூலம் ரூ 4 கோடி கார்பஸ் உருவாக்க எவ்வளவு மாதாந்திர பங்களிப்பு தேவை?


ஓய்வு பெறும்போது ரூ.4 கோடி கார்ப்பஸ் (Pension Corpus) பெற, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.11,200 செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில், தற்போதைய 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ரூ.4,02,59,738.7 கிடைக்கும். 


EPF மூலம் ரூ 5 கோடி கார்பஸ் உருவாக்க எவ்வளவு மாதாந்திர பங்களிப்பு தேவை?


ஓய்வு பெறும்போது ரூ.5 கோடி கார்ப்பஸ் பெற, இபிஎஃப் சந்தாதாரர்கள் 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.12,000 செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில், தற்போதைய 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ரூ.5,08,70,991.64 கிடைக்கும். 


EPF மூலம் ரூ 6 கோடி கார்பஸ் உருவாக்க எவ்வளவு மாதாந்திர பங்களிப்பு தேவை?


ஓய்வு பெறும்போது ரூ.6 கோடி கார்ப்பஸ் பெற, இபிஎஃப் சந்தாதாரர்கள் 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.12,100  செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில், தற்போதைய 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ரூ.6,04,35,029.1 கிடைக்கும். 


மேலும் படிக்க | பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை கட்டணத்தில் 12% வரை குறைப்பு: Amazon India அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ