EPFO Upate: PF உறுப்பினர்க்ளுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள் வசதிகள் அதிகரிக்கவுள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அவ்வப்போது இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) நன்மைக்காகவும் வசதிக்காகவும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. ஏற்கனவே உள்ள பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள அப்டேட்டும் பிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கும் வகையில் இருக்கும்.
EPFO IT System 2.01
PF சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான க்ளெய்ம் செட்டில்மெண்ட் எளிதாகிவிடும். EPFO அடுத்த காலாண்டிற்குள் அதன் மேம்படுத்தப்பட்ட IT அமைப்பான EPFO IT சிஸ்டம் 2.01 ஐ தொடங்க தயாராக உள்ளது.
புதிய முறையின் நன்மைகள் என்ன?
- EPFO -வின் புதிய அமைப்பால் 6 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
- EPFO கணக்கு தொடர்பான அனுபவம் இனி இன்னும் சிறப்பாக இருக்கும்.
- இது மட்டுமின்றி, நிறுவனங்களுக்கும் EPFO தொடர்பான பணிகள் எளிதாகிவிடும்.
- புதிய முறையில், பணம் செலுத்துதல் மற்றும் க்ளெய்ம் தீர்வுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்கும்.
- இதன் மூலம் இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்கள் எளிதாக பணம் எடுக்க முடியும்.
புதிய அமைப்பு எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
இன்னும் மூன்று மாதங்களுக்குள் புதிய அமைப்பு செயல்பாட்டிற்கு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை EPFO இன் IT அமைப்பின் நவீனமயமாக்கலை ஆய்வு செய்ததாக கூறப்படுகின்றது. மூன்று மாதங்களுக்குள் புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
பணி மாறும்போது டிரான்ஸ்பர் செய்ய வேண்டியதில்லை
- தற்போது செயல்முறையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தப்க்களுக்குப் பிறகு, க்ளெய்ம் செயல்முறை ஆரம்பம் முதல் இறுதி வரை முற்றிலும் தானியங்கி முறையில், அதாவது அடோமேஷனில் இருக்கும்.
- ஓய்வூதிய செலுத்தல் மையப்படுத்தப்படும்.
- இது மாதாந்திர அடிப்படையில் இயக்கப்படும்.
- EPFO கணக்கியல் அமைப்பு உலகளாவிய கணக்கு எண்ணின் (UAN) அடிப்படையில் இருக்கும்.
- இது இபிஎஃப் சம்தாதாரர்களுக்கான (EPF Subscribers) செயல்முறையை எளிதாக்கும்.
- மின்னணு சலான் மற்றும் ரசீது மறுகட்டமைக்கப்படும்.
- ஒரு ஊழியர் வேலை மாறும்போது உறுப்பினர் ஐடியை (எம்ஐடி) மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
- இதனால் இபிஎஃப் தொகை (EPF Amount) பற்றி ஊழியர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
- புதிய வேலையில் சேர்ந்த பிறகு, புதிய நிறுவனத்தில் இருந்து அவரது கணக்கில் பணம் செலுத்தப்படத் துவங்கும்.
ஆட்டோ-மோட் ப்ராசசிங்
EPFO ஏற்கனவே 2024-25 நிதியாண்டிற்கான எளிமையான தகவல் தொழில்நுட்ப செயல்முறைகளை தொடங்கியுள்ளது. இதில், ரூ. 1 லட்சம் வரையிலான அனைத்து வகையான EPF அன்வான்ஸ் க்ளெய்ம்களுக்கான தானியங்கி முறை செயலாக்கம் அதாவது ஆட்டோ-மோட் செயலாக்கமும் அடங்கும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர்களுக்கு வலுவான நிதி பாதுகாப்பை அளிக்கும் ஒரு திட்டமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நடத்தப்படும் இந்த திட்டம், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, மாதாந்திர ஓய்வூதிய வடிவில் ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. இது அரசாங்கத்தால் 1952 இல் நிறுவப்பட்டது.
மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ