Gold Price: திடீரென உயரும் தங்கத்தின் விலை.. காரணம் என்ன..!!
தொடர்ந்து 2 நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று காலை திடீரென சவரனுக்கு ₹192 உயர்ந்து ₹38,760க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து 2 நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று காலை திடீரென சவரனுக்கு ₹192 உயர்ந்து ₹38,760க்கு விற்கப்பட்டது.
சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையைத் தவிர்த்து, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி 1ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம், கிராம் ₹3,735க்கும், சவரன் ₹56 குறைந்து ₹29,880க்கும் விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை திடீரென உயரத்துவங்கியது. அதாவது, 3ம் தேதி வசரனுக்கு ₹632 அதிகரித்தது.
அடுத்தடுத்து மூன்று நாட்களிலேயே தங்கம் சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. ஜனவரி இறுதியில் முதல் முறையாக சவரன் ₹31,000ஐ தாண்டியது.
கொரோனா பரவல் தீவிரம் ஆன பிறகு, தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொழில்துறைகள் முடங்கியதாலும், டாலர் மதிப்பில் ஸ்திரத்தன்மை இல்லாததாலும் தங்கம் விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ₹40,000ஐ நெருங்கியது.
ஆனால், கொரோனாவுக்கு ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை சரிந்தது.
ALSO READ | School News Update: தமிழகத்தில் 10-12 ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிப்போகுமா..!!!
இதன்பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டது. ஆனால், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் 2வது முறையாக கொரோனா பரவல் தொடங்கியதால், அந்த நாடுகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அப்போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி தங்கம் சவரனுக்கு ₹344 சரிந்தது, தொடர்ந்து நான்கு நாட்களில் ₹1,552 குறைந்தது.
கடந்த மாதம் 29ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ₹624 உயர்ந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சரிவு கண்ட தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கடந்த 3ம் தேதி ₹152 சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இதே விலையில் விற்கப்பட்டது. நேற்று சவரனுக்கு ₹232 சரிந்தது.
இந்நிலையில், சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் மீண்டும் 1,900 டாலரை தாண்டிய நிலையில், தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ₹24 உயர்ந்து ₹4,845க்கும், சவரனுக்கு ₹192 உயர்ந்து ₹38,760க்கும் விற்பனையானது.
ALSO READ | மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கிறிஸ்துவ மத போதகர் சஸ்பெண்ட்....!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR