PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?
EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
EPF Interest: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO 2023-24 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதால், இந்த முறை இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) வழக்கத்தை விட அதிக வட்டி கிடைக்கும். பிஎஃப் கணக்கில் வட்டி எப்போது வரும் என்று பிஎஃப் உறுப்பினர்கள் காத்திருக்கிறார்கள்.
இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் (EPF Interest Rate) முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளமான X இல் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக EPF விவரங்களை தெரிவித்தது.
பயனர் ஒருவர், “FY-2023-24 சந்தாதாரர்களின் EPFO வட்டி எப்போது வரவு வைக்கப்படும்? இது விரைவில் நடந்தால், அது EPFO-ன் இமேஜை மேம்படுத்தும். மேலும் சந்தாதாரர்கள் மத்திய அரசை வாழ்த்துவார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு, EPFO உடனடியாக பதிலளித்தது. ‘அன்புள்ள உறுப்பினரே, இந்த நடவடிக்கை செயல்முறையில் உள்ளது. இது விரைவில் நிறைவடையலாம். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது திரட்டப்பட்ட தொகையாக முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது.’ என்று தெரிவித்தது.
EPFO மார்ச் 2024 -இன் படி, 2022-23 நிதியாண்டுக்கான வட்டியை 28.17 கோடி உறுப்பினர் கணக்குகளுக்கு வரவு வைத்துள்ளது.
2022-23 நிதியாண்டிற்கான வட்டி தற்போதைய தேதியின்படி 28.17 கோடி உறுப்பினர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக EPFO சமூக ஊடகங்களில் இடுகையின் மூலம் உறுப்பினர்களுக்குத் தெரிவித்து. மேலும் இபிஎஃப் சந்தாதாரர்களை (EPF Subscribers) தங்கள் பாஸ்புக்கைச் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தியது.
2023-24 நிதியாண்டில், CBT, EPF வட்டி விகிதத்தை 8.15% ஆக இருந்த முந்தைய விகிதத்தில் இருந்து 8.25% ஆக அதிகரிக்க பரிந்துரைத்தது. பிப்ரவரி 10, 2024 தேதியிட்ட PIB வெளியீட்டின் படி, இபிஎஃப்ஓ, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரிய தொகையாக, மொத்த அசல் தொகையான சுமார் ரூ. 13 இலட்சம் கோடியின் அடிப்படையில், சுமார் ரூ. 1,07,000 கோடியை EPF உறுப்பினர்களின் கணக்குகளில் விநியோகிக்க பரிந்துரைத்தது.
ஆன்லைனில் பிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் இருப்பை (EPF Balance) ஆன்லைனில்., உமங் செயலி (UMANG App) அல்லது நேரடியாக இபிஎஃப்ஓ போர்ட்டலில் (EPFO Portal) சென்றும் பார்க்கலாம்.
மேலும் படிக்க | இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?
EPFO Website
முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இபிஎஃப் இணையதளத்திற்கு செல்லவும். போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும். அதில் Our Services என்ற டேபை கிளிக் செய்யவும். அதன் பிறகு அதில் உள்ள For Employees என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் PF Passbook View என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பணியாளர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த இபிஎஃப் இருப்பையும் தெரிந்துகொள்ளலாம்.
UMANG App
உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும். உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும். இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.
இவை தவிர 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு 'EPFOHO UAN ENG' என்ற வடிவத்தில் SMS அனுப்பியும் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ