முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது என்று சொல்வதை கேட்டிருக்கலாம், ஆரோக்கியத்திற்கு அருமையான முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களும், அதன் விலையும் அனைவரையும் முட்டையை நோக்கி ஈர்க்கின்றன. அதிலும் குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை உண்பது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முட்டை வர்த்தகம்


முட்டையின் அருமை பெருமைகள் பலருக்கும் தெரியும். ஆனால், அதன் விலை இந்தியாவில் தான் உலக நாடுகளிலேயே குறைவு என்று தெரியுமா? உலகின் பிற நாடுகளின் முட்டை விலை எவ்வளவு என்று தெரிந்தால் அதிர்ந்து போகலாம்.


சத்தான உணவு முட்டை


முட்டைகள் பொதுவாக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நுகரப்படும் உணவாக இருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் முட்டையின் விலையும் மாறுபடும். ஆனால் விலையைக் கேட்டால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியல் நீளமானது. ஆனால், முட்டை விலை பட்டியலில், மிகவும் குறைவான விலைக்கு விற்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலில் இருக்கிறது.


கைக்க்கு எட்டாத உயரத்தில் முட்டை விலை


ஆனால், சில நாடுகளில் முட்டையின் விலை சாமானியர்கள் வாங்க முடியாத அளவுக்கு உள்ளது. முட்டை என்பது வாங்க முடியாத விலையுயர்ந்த பொருளாக இருக்கும் நாடுகள் எவை என்பதையும், சாமானியர்களும் குறைந்த விலையில் முட்டைகளைப் பெறக்கூடிய நாடுகள் எவை என்பதும் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்.


மிகப் பெரிய தொழில் வாய்ப்பாகவும் மாற்றிக் கொள்ள சிலருக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கலாம். எந்த நாட்டில் முட்டை தான் விலை அதிகம் என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு 


சர்வதேச அளவில் முட்டை விலை


தொடர்பான புள்ளிவிவரங்கள் அமெரிக்க டாலரில் பகிரப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் மிக அதிக அளவுக்கு முட்டை விலை இருப்பது சுவிட்சர்லாந்து தான். அதேபோல, மிகவும் மலிவான விலைக்கு முட்டை கிடைப்பது இந்தியாவில் தான் என்பது தெரிய வந்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் முட்டை விலை அதிகம்
சுவிட்சர்லாந்தில் முட்டைகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டும். இங்கு ஒரு கிரேட்டின் விலை ஏழு டாலர்கள், அதாவது ரூ.550க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கும்.



 
முட்டை விலை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்
நியூசிலாந்தில் 5.43 டாலர், டென்மார்க்- 4.27, உருகுவேயில் 4.07, அமெரிக்காவில் ஒரு க்ரேட் முட்டை 4.31 டாலருக்கு கிடைக்கிறது. இந்த நாடுகளில், இந்திய நாணயத்தின் படி, ஒரு கிரேட் முட்டைக்கு ரூ.350 வரை செலுத்த வேண்டும்.
 
இந்தியாவில் முட்டை விலை குறைவு
உலகிலேயே மிகவும் மலிவான முட்டை இந்தியாவில் கிடைக்கிறது.இங்கு ஒரு கிரேட்டின் விலை .94 டாலர்கள் அதாவது 78 ரூபாய். அதாவது ஒரு முட்டையின் விலை ஏறக்குறைய 6 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச நாடுகளில் முட்டை விலை


ரஷ்யாவில் $1.01க்கும், பாகிஸ்தானில் $1.05க்கும், ஈரானில் $1.15க்கும், பங்களாதேஷில் $1.12க்கும் ஒரு குட்டை முட்டை கிடைக்கிறது. அதாவது இந்த நாடுகளில் இந்திய மதிப்பில் ஒரு கிரேட் முட்டைக்கு சுமார் ரூ.100 செலவழிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஜூஸ்கள் சூப்பர் டானிக்! சர்வதேச மருத்துவர்களின் பரிந்துரை


உலக அளவில், முட்டை தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் சீனாவும், அதையடுத்து இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. இந்திய அளவில், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முட்டை தயாரிப்பில் முதல்  இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு சுமார் 103 பில்லியன் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.  


இந்தியாவில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு முட்டையில்  உள்ள சத்துக்கள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்.


100 கிராம் முட்டையின் ஊட்டச்சத்து மதிப்புகள் இவை. சராசரியாக ஒரு முட்டையின் எடை சுமார் 60-70 கிராம் என்று கூறப்படுகிறது.


60 கிராம் எடையுள்ள ஒரு முட்டையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து மதிப்பு இது.


• புரதங்கள்-6 கிராம்
• கொழுப்பு-6 கிராம்
• ஆற்றல்-70 கிலோகலோரி


பொதுவாக, முட்டை வாங்கியவுடன் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் சாப்பிடவேண்டும். இல்லையெனில், அதன் உயிர்சத்துக்கள் குறையதொடங்கும், பின்னர் கெட்டுபோகும் என்பதால், எந்த முட்டையாக இருந்தாலும் அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதிலும், வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் முழுசத்தும் நமக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | முடி கொத்து கொத்தாக வளருமா? அப்போ இந்த ஹோம் மேட் டானிக் மட்டும் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ