Kisan Credit Card மூலம் வாங்கும் கடனை எதற்கு பயன்படுத்த வேண்டும்; அறிந்துக்கொள்க
எந்தெந்த வேலைகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுக்கு கடனைப் பயன்படுத்துவதற்கு விலக்கு கிடைக்கிறது? முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு மலிவான விலையில் கடன்கள் (Farmers Loan) வழங்கப்படுகின்றன. இதன் மூலம், விவசாயிக்கு 4 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும், இதற்காக, மத்திய அரசாங்கம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த கடன் அட்டை (Kisan Credit Card) மூலம் விவசாயிகளுக்கு எந்தவித உத்தரவாதம் இல்லாமல் ரூ. 1.60 லட்சம் வரை கடன் கிடைக்கும். அதே நேரத்தில், வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்தும்போது, உங்கள் கடன் தொகையை ரூ .3 லட்சமாக உயர்த்தலாம். இந்த கடன் அட்டைகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
Kisan Credit Card மூலம் பெறப்படும் இந்த கடனை எதற்கு பயன்படுத்தலாம் என்று விவசாயிகளின் மனதில் அடிக்கடி ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, கடன் தொகையை எந்த வேலைக்காக நீங்கள் பெறுகிறீர்கள். அதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்க விதிகளின்படி, இந்த கடனை சந்தைப்படுத்தல் தொடர்பான செலவுகள், அன்றாட விவசாய நடவடிக்கைகளுக்கான நிதி, பயிர் உற்பத்தி மற்றும் விவசாய சொத்துக்களை பராமரித்தல் மற்றும் பால் பண்ணை, விலங்குகள் போன்ற தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.
ALSO READ | Kisan Credit Card பெற இந்த ஆவணங்களைப் பயன்படுத்தவும்; உடனடியாக உங்களுக்கு கிடைக்கும்
அதாவது, இந்த கடனை செலவு செய்வதற்கான நிபந்தனைகளில் முக்கியமானது விவசாயம் அல்லது பால் பண்ணை தொடர்பான பணிகளுக்காக வழங்கப்படுகிறது. ஆனாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கூற்றுப்படி, விவசாயிகள் தங்கள் கடன் தொகையில் 10% வரை தங்கள் வீட்டு செலவுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.
விவசாயிகள் கிசான் கிரெடிட் அட்டை பெற, கூட்டுறவு வங்கி (Co-operative Bank), பிராந்திய கிராமப்புற வங்கி (Regional Rural Bank), இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இது தவிர, இந்த அட்டையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), பாங்க் ஆப் இந்தியா மற்றும் தொழில்துறை மேம்பாட்டு வங்கி ஆகியவற்றிலும் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ALSO READ | ஆன்லைனில் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்
மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/. சென்று, இங்கே நீங்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, உங்கள் அருகிலுள்ள பொதுசேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR