Kisan Credit Card Updates: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM Kisan Credit Card) கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மற்றும் கிசான் கிரெடிட் கார்டு ஆகியவற்றை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
2.5 கோடி விவசாயிகளுக்கு (Famers) கடன் அட்டைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக மலிவான கடன்களை வழங்குவதன் மூலம் இடைத்தரகர்களின் முறையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசாங்கம் விரும்புகிறது. உழவர் கடன், உரங்கள், விதைகள் போன்றவற்றுக்கு எளிதாக கடன்களை வழங்குகின்றன. கிரெடிட் அட்டை பெற குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 75 ஆண்டுகள் ஆகும்.
ALSO READ | ஆன்லைனில் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்
விவசாயிகளுக்கு 4% விகிதத்தில் அரசாங்கம் மிகக் குறைந்த விலையில் கடன்களை (Loan) வழங்குகிறது. இருப்பினும், இவ்வளவு குறைந்த விகிதத்தில் கடன் பெற சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் விவசாயிகளுக்கு நான்கு சதவீத வட்டியிலான கடன் நன்மை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு 9 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது. அதற்கு மத்திய அரசாங்கம் 2 சதவீதம் மானியம் அளிக்கிறது. அதாவது இது 7 சதவீத வட்டியில் கடன் கிடைக்கும். மறுபுறம், விவசாயி இந்த கடனை சரியான நேரத்தில் திருப்பித் தந்தால், அவருகளுக்கு மேலும் 3% தள்ளுபடி கிடைக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால், 9 சதவீத வட்டியில், மத்திய அரசாங்கம் 2% மற்றும் தள்ளுபடி 3% என மொத்தம் 5% சதவீதம் நன்மை கிடைக்கும். இறுதியா பார்த்தால் உங்களுக்கான கடன் வட்டி 4% சதவீதமாக இருக்கும்.
ALSO READ | பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் ரூ.6000 பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR