தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்: மருந்து உட்கொள்வது பலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருப்பினும், சில மருந்துகள் தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தானவையாக இருக்கலாம், அதனால்தான் அரசாங்கம் மருந்துகள் மீதான கவனத்தை எப்போதுமே தீவிர நிலையில் வைத்திருக்கிறது. தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organization (CDSCO)) பொறுப்பாகும். மருந்துகளை தடை செய்யும்போது, அது தொடர்பான தகவல்களையும் வெளியிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருந்து தடைசெய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன?


இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை, இனி நாட்டில் தயாரிக்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி கிடையாது. 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் இது.


இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்
பாதுகாப்பு கவலைகள்: கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு அல்லது மரணம் போன்ற தீவிர பக்க விளைவுகள் கொண்ட மருந்துகள்
பயனற்ற தன்மை: சிகிச்சையளிப்பதில் மருந்து பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்படாத மருந்துகள் தடை செய்யப்படும்
தர நிலை சிக்கல்கள்: மருந்து தூய்மையற்றது அல்லது அசுத்தமானது
உற்பத்தி விதிமீறல்கள்: மருந்து பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வீட்டு விலை அதிகரித்தாலும், வாங்கித் தள்ளும் மக்கள்! 2024இல் மேலும் அதிக வீடுகள் விற்கும்!


தடை செய்யப்பட்ட மருந்துகளின் வகைகள்
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஒற்றை மருந்துகள் (Single Drugs) மற்றும் நிலையான டோஸ் சேர்க்கைகள் ஆகும்.


ஒற்றை மருந்துகள்: இவை பாதுகாப்புக் கவலைகள் அல்லது சிகிச்சைக்கு ஏற்புடையதாக இல்லாததால் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட தனிப்பட்ட மருந்துகள்.


நிலையான-டோஸ் சேர்க்கைகள் (Fixed-Dose Combinations (FDCs)): இவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை நிலையான விகிதத்தில் இணைக்கப்பட்ட மருந்துகள் ஆகும். பாதுகாப்பற்றவை அல்லது அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்க சரியான அறிவியல் சான்றுகள் இல்லாதவை என கண்டறியப்பட்டால் அவை தடைசெய்யப்படுகின்றன.


தடைசெய்யப்பட்ட ஒற்றை மருந்துகளின் பட்டியல்:
அமிடோபிரைன்
ஃபெனாசெடின்
நியாலமைடு
குளோராம்பெனிகால் (கண் மற்றும் மேற்பூச்சு தயாரிப்புகளைத் தவிர)
ஃபெனில்ப்ரோபனோலமைன்
ஃபுராசோலிடோன்
ஆக்ஸிஃபென்புட்டாசோன்
மெட்ரோனிடசோல் (முகப்பருக்கான மேற்பூச்சு பயன்பாடு)


மேலும் படிக்க | சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்


தடைசெய்யப்பட்ட FDCகளின் பட்டியல்:
டிசம்பர் 2023 வரை, இந்தியாவில் மொத்தம் 14 FDCகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அடங்கும்:


Nimesulide + Paracetamol Dispersible Tablet
அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின்
போல்கோடின் + ப்ரோமெதாசின்
Chlopheniramine Maleate + Phenylephrine ஹைட்ரோகுளோரைடு + காஃபின்
டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு
Ambroxol ஹைட்ரோகுளோரைடு + Guaiphenesin + Levosalbutamol + Menthol
டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + குய்பெனெசின்
டிஃபென்ஹைட்ரமைன் ஹைட்ரோகுளோரைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + அம்மோனியம் குளோரைடு
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
Dextromethorphan Hydrobromide + Doxylamine Succinate + Phenylephrine Hydrochloride
போல்கோடின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குய்பெனெசின்
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + டாக்ஸிலமைன் சுசினேட் + குய்ஃபெனெசின்
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + குய்ஃபெனெசின்


இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது. https://www.drugscontrol.org/banned-drugs.php என்ற வலைதளத்தில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது சரியா? லிக்விட் ஃபண்ட் அல்லது ஃபிக்சட் டெபாசிட் எது ஓகே?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ