முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது சரியா? லிக்விட் ஃபண்ட் அல்லது ஃபிக்சட் டெபாசிட் எது ஓகே?

Fixed Funds vs Liquid funds: வங்கியின் நிலையான வைப்பு தொடர்பாக அனைவருக்கும் தெரியும். ஆனால், லிக்விட் ஃபண்ட்ஸ் பற்றி விரிவாக தெரியாது. எதெல்லாம் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 11, 2023, 09:59 AM IST
  • ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்யவேண்டும்
  • முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது
  • குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தாலும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது சரியா? லிக்விட் ஃபண்ட் அல்லது ஃபிக்சட் டெபாசிட் எது ஓகே? title=

லாபமான முதலீடு: குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்களைத் தேடும் முதலீட்டாளர்கள் பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்புகள் (Fixed deposits) சரியானதாக இருக்கும் என்று நினைப்பார்கள். குறைந்த ரிஸ்க் கொண்ட விருப்பத்தை விரும்புபவர்களுக்கான தெரிவுகளில் வங்கி FDயைத் தவிர லிக்விட் ஃபண்ட்ஸ் ஏற்றதாக கருதப்படுகிறது. வங்கியின் நிலையான வைப்பு தொடர்பாக அனைவருக்கும் தெரியும். ஆனால், லிக்விட் ஃபண்ட்ஸ் பற்றி விரிவாக தெரியாது. எதெல்லாம் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

லிக்விட் ஃபண்ட்ஸ் (Liquid funds)

எந்தவொரு முதலீடுமே எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஒரு குறுகிய காலகட்டத்துக்கு, பணம் எதுவும் பலனளிக்காமல் இருப்பதைப் பார்க்கலாம். சில சூழ்நிலைகளில், பணத்தை எப்போது திரும்ப எடுக்கவேண்டும் என்பது நமக்குக் தெரிவதில்லை. திரவ நிதிகள் (Liquid funds)என்பது கருவூல பில்கள், அரசாங்கப் பத்திரங்கள், சேமிப்புக் கணக்குகள், வைப்புச் சான்றிதழ்கள் அல்லது வணிகத் தாள்கள் போன்ற குறுகிய கால சொத்துக்களில் முதலீடு செய்யும் கடன் நிதிகள் ஆகும்.

மேலும் படிக்க - சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?

செபி விதிமுறைகளின்படி, திரவ நிதிகள் 91 நாட்கள் வரை முதிர்வு கொண்ட கடன் மற்றும் பணச் சந்தைப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

முதலீட்டு டிப்ஸ்: முதலீட்டாளர் பணத்தை எங்கு முதலீடு செய்யவேண்டும்? இந்த கேள்விக்கு முதலீட்டாளர்கள் பின்வரும் விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்யவேண்டும்
முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது.
குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தால் கூட பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை வைப்பது முதலீட்டாளரின் நோக்கத்தை பூர்த்தி செய்யும். இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே. ஃபிக்சட் டெபாசிட்டில் வட்டி கிடைக்கும் என்பதும், பணம் பத்திரமாக இருக்கும் என்பதும் வைப்புத் தொகையின் நன்மைகள்.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு அடிச்சுது லாட்டரி: விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்

அதே சமயத்தில், அதன் பாதகமான அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பணத்தை முதலீடு செய்ய முடியும் என்பதும், காலகட்டத்தை தேர்ந்தெடுப்பதில் நெகிழ்தன்மை எதுவும் கிடையாது.

லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு: சேமிப்புக் கணக்குகளுடன் அல்லது மிகக் குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட்களுடன் ஒப்பிடும் போது நியாயமான நல்ல ரிட்டர்ன்கள் திரவ நிதிகள் என்று அறியப்படும் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொடுக்கும். எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளமுடியும் என்பது இதில் முக்கியமான நன்மை என்று சொல்லலாம்..

திரவ நிதிகள் என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது போன்றது தான். குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட நீங்கள் எங்காவது பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், இதுவும் ஒரு நல்ல வழி. ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் லிக்விட் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள அம்சங்கள் மற்றும் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் இந்த குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்களைப் பற்றி அறிந்து சிறந்த முடிவை எடுக்க முடியும்.

மேலும் படிக்க | வீட்டு விலை அதிகரித்தாலும், வாங்கித் தள்ளும் மக்கள்! 2024இல் மேலும் அதிக வீடுகள் விற்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News