EPF சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனிமேல் முன்பணம் எடுக்க தடை! காரணம் என்ன?
EPF WITHDRAWAL Alert: முன்பணமாக இபிஎஃப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அனுமதியால், இன்று நிலைமை சீரான பிறகும் மக்களை தேவையில்லாத செலவுகளுக்காக பணம் எடுக்கத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது
புதுடெல்லி: இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பில் ஒரு பகுதியை எடுக்க அனுமதித்த தனது உத்தரவை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வட்டாரங்கள் இந்த செய்தியை தெரிவித்தாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்பதால், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தொற்றுநோய் மக்களின் இயல்புவாழ்க்கையை முடக்கியது.
பொருளாதார சிக்கல்களில் உலகமே தவித்துவந்தபோது, EPFO அதன் உறுப்பினர்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து இருமுறை முன்பணம் எடுக்க அனுமதித்தது. தொற்றுநோய் காலத்தின்போது, வருங்கால வைப்பு நிதி கணக்குக் வைத்திருந்தவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இந்த ஏற்பாடு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
மார்ச் 2020 இல் கொரோனா பரவல் தொடர்பாக பல முன்மாதிரி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அதன் தொடர்ச்சியாக, வருங்கால வைப்பு நிதி முன்பணம் தொடர்பான முன்மாதிரி நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வ அரசிதழில் அறிவிப்பாக வெளியானது.
1952 ஆம் ஆண்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், 68L பத்தியின் கீழ் துணை பாரா (3)இல் இதற்கான திருத்தம் செய்யப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முன்பணமாக இபிஎஃப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அனுமதியால், இன்று நிலைமை சீரான பிறகும் மக்களை தேவையில்லாத செலவுகளுக்காக பணம் எடுக்கத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த முன்பணம் அனுமதி உத்தரவை மாற்றி, இபிஎப்ஓ வாரியம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின்படி, இனி பிஎஃப் தொகையிலிருந்து முன்பணத்தை சந்தாதாரர்கள் பெற முடியாது என்று கூறப்படுகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 91.6 லட்சம் சந்தாதாரர்கள் 19,126.29 லட்சம் கோடி ரூபாயை முதல் ஆண்டிலும், இரண்டாம் ஆண்டில் 62 லட்சம் சந்தாதாரர்கள் 11,843.23 கோடி ரூபாய் அளவிலான பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்கள்.
அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படுகிறது. இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும்.
மேலும் படிக்க | EPF Withdrawal: அவசர தேவையின் போது ஆன்லைனில் பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி?
நிறுவனங்கள் மாதந்தோறும், ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.
ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீத பங்களிப்பை ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரையும் கட்டாயப்படுத்துகிறது. இது ஒரு வரி சேமிப்பு கருவியாக மட்டுமல்லாமல் முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
அக்டோபர் மாதத்தில் EPFO 15.29 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது
டிசம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட ஊதியத் தரவுகளின்படி, ஓய்வூதிய நிதி அமைப்பு அக்டோபர் மாதத்தில் நிகர அடிப்படையில் 15.29 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்தது, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 18.22 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2023 இல் EPFO, முந்தைய ஆண்டை விட 6.07 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | SIP Calculator: தினமும் ரூ.100 சேமித்து ரூ. 4 கோடிக்கு மேல் லாபம் பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ