தற்போது, மொபைல்கள் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைய, வாகனம் ஓட்டும்போது Google Map பயன்படுத்தினால், போக்குவரத்து விதிகளின்படி (Traffic Rules), ₹5000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லி: இன்றைய காலகட்டத்தில், யாரோ ஒருவரிடம் வழி கேட்பதை விட Google Map மூலம் செல்ல வேண்டிய இலக்கை அடையவே மக்கள் விரும்புகிறார்கள். Google Map பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். ஆனால் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைலில் கூகிள் மேப் பயன்படுத்தினால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


சமீபத்தில், தில்லியில் (Delhi) ஒருவருக்கு மொபைலை பயன்படுத்தியதாக காவல்துறை அபராதம்  விதித்தது. கார் டிரைவர் தான் யாருடனும் பேசவில்லை, நான் செல்ல வேண்டிய இலக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வாதிட்டார், ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொபைல் ஹோல்டரில் வைப்பதற்கு பதிலாக டாஷ்போர்டு அல்லது கையில் மொபைலை வைத்திக் கொண்டு கூகிள் மேப் செயலியை பயன்படுத்துவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வருகிறது.


ALSO READ | Alert: மிக ஆபத்தான 8 App; இவை மொபைலில் இருந்தால் கணக்கில் பணம் காலியாகலாம்


எனவே வாகனம் ஓட்டும் போது, கையில் மொபைலை வைத்திக் கொண்டு கூகிள் மேப்பை பயன்ப்படுத்தினால், 2020 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் (Motor Vehicle Act 2020), 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகள் பைக் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும். 


பைக்கில் மொபைல் ஹோல்டரை பொருத்த 200 ரூபாயும், காரில் பொருத்த 1000 ரூபாயும் செலவாகும். அதை பொருத்தி விட்டால், 5000 ரூபாய் அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.


ALSO READ | WhatsApp, Facebook, Instagram சேவைகள் முடங்கியதன் காரணம் என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR