தமிழகத்துக்கு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு நேற்றே முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.


இதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு கால தாமதம் செய்துவரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். 


நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்...! 


காவிரி தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாததால் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும். காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. போல் யாரும் இந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.


அரசு நல்லதே செய்தாலும் அதை குறை சொல்வதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. தமிழக நலனுக்காக அனைவரும் ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.