இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக் கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்குஅங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். 


ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள்.சகோதர வகையில் ஒற் றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.    


கடகம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசிசாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அமோகமான நாள்.  


சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கனவு நனவாகும் நாள். 


கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கள் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 


துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள்கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைப்படும் நாள்.


தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். தலைச் சுற்றல், முழங்கால் வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். 


மகரம்: கணவன் மனைவிக் குள் வீண் விவாதம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.    


கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.  வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.  உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.இனிமையான நாள்.


மீனம்: தவறு செய்ப வர்களை தட்டிக் கேட்பீர் கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலித மாகும் நாள்.