கடவுளுக்கு கற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம் தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறுகற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது.


ALSO READ | நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளது; அதன் பயன் என்ன?


கற்பூர தீப ஆராதனையின் போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்கு முன் உருண்டு வருவதும் மங்களமாகும். வீட்டுப் பூஜையறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து அடங்குவதே நல்லது. வாயால் ஊதியோ கையால் விசிறியோ அணைப்பது பெருங்குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR