புதுடெல்லி: சீக்கிய யாத்ரீகர்களுக்கான கர்த்தார்பூர் நடைபாதையை இரண்டு நாள் நோட்டீசில் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கம் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. ஏழு நாள் முன் அறிவிப்பு காலம் தேவைப்படும் இருதரப்பு உடன்படிக்கைக்கு எதிராக பாகிஸ்தானின் இந்த் அறிவிப்பு இருப்பதால், பாகிஸ்தானின் முன்மொழிவின் நோக்கம் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கர்தார்பூர் வழித்தடத்தை ஜூன் 29 ஆம் தேதி திறப்பதாக 2 நாட்கள் குறுகிய கால அவகாசத்தில் அறிவிப்பு வெளியிடும் பாகிஸ்தான் தனக்கு நல்லெண்ணம் இருப்பதான பிரம்மையை உருவாக்க முயற்சிக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


Also Read | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு


இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, கர்த்தார்பூர் நடைபாதை மீண்டும் திறக்கப்படும் தகவல்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஏழு நாட்களுக்கு முன்னதாக பகிரவேண்டும். இதன் மூலம், கர்த்தார்பூர் குருத்வாராவுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ள முடியும். அதையடுத்து, பயண நடைமுறைகளுக்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு செய்யமுடியும்.  


சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார். கர்தார்பூர் குருத்வாரா பாகிஸ்தான் நாரோவல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து 4.5 கிலோமீட்டரில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சீக்கியர்களின் புனிதத்தலமான கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானின் வசம் சென்றது. ஆனால், இந்தியர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது.   


இந்தியா பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தேரா பாபா நானக் குருத்வாரா, ராவி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. ராவி ஆற்றுக்கு மேற்கு கரையில் பாகிஸ்தானின் கர்தார்பூர் நகரம் அமைந்துள்ளது.


Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்


கர்தார்பூர் வழித்தடம் வழியாக யாத்ரீகர்கள் குருத்வாராவுக்கு செல்லலாம்.


இந்த வழித்தடம் வழியாக குருத்வாராவுக்கு செல்லும்போது விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.