சபரிமலையில் மண்டல பூஜைகள் நாளை முதல் தொடங்கவிருக்கின்றன. சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி இன்று பம்பையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் நாளை மண்டல பூஜைகள் நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Coronavirus) பாதிப்பினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கொரோனாவின் புதிய திரிபு பீதியை மீண்டும் கிளப்பியிருக்கும் நிலையில் தற்போது சபரிமலையில் அதிகபட்சமாக 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.


கொரோனா பரிசோதனை முடிவுகள் (Corona Test), ஆன்லைன் முன்பதிவு (Virtual Queue management System) ஆகியவை இருந்தால்தான் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கிறது.  


Also Read | இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்? - இதோ உங்களுக்கான பதில்..!


ஆனால் (Sabarimala) பூஜை புனஸ்காரங்கள் வழக்கம் போலவே நடைபெறுகின்றன. பத்தனம்திட்டா ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தங்க அங்கியானதுஇன்று பம்பைக்கு வந்து சேர்ந்தது.  


பம்பையில் பாரம்பரிய முறைப்படி தேவஸ்தான ஊழியர்கள் தங்க அங்கியைப் (Golden Ornament) பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெட்டியி வைத்து பாதுகாக்கப்படும் அங்கியை தலையில் சுமந்துக் கொண்டு சபரிமலைக்கு நடந்து செல்வார்கள்.   நாளை மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.


உச்சிகால பூஜை முடிந்த பிறகு, மாலை ஆறரை மணிக்கு பூஜைகள் முடியும் வரை பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன்பின்னர் நாளை நண்பகலில் சபரிமலை அய்யப்பனுக்கு  மண்டலபூஜைகள் நடைபெறும்.


Also Read | முருகனை போல சபரிமலை ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உண்டு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR