சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவிப்புகளும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.inல் தங்கள் முடிவுகளைப் பார்க்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் பல சமயங்களில் சிபிஎஸ்இ ரிசல்ட் வந்த பிறகு இணையதளம் ஸ்லோ ஆகிறது அல்லது இன்டர்நெட் பிரச்னை ஏற்பட்டால் பீதி அடையத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இணையம் மற்றும் இணையதளம் இல்லாமல் உங்கள் முடிவையும் நீங்கள் பார்க்கலாம். இதற்கு உங்கள் போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதுமானது.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி


எஸ்எம்எஸ் மூலம் முடிவைப் பார்க்க, உங்கள் மொபைலில் cbse10 என டைப் செய்து, ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப் பிறகு உங்கள் ரோல் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவைச் சரிபார்க்க, cbse12 என டைப் செய்து ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப் பிறகு உங்கள் ரோல் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.


சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை 2022 சரிபார்ப்பது எப்படி


* சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவைப் பார்க்க, cbseresults.nic.in ஐப் பார்வையிடவும். 


* இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், 'சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022' அல்லது 'சிபிஎஸ்இ 12 ஆம் தேர்வு முடிவு 2022' என்ற இணைப்பைக் காணலாம். அதை கிளிக் செய்யவும்.


* இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தில், ரோல் எண் போன்ற கோரப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.


* நீங்கள் சமர்ப்பித்தவுடன் உங்கள் முடிவு உங்கள் முன் திரையில் காட்டப்படும். இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.


டிஜிலாக்கர் அல்லது உமாங் இல் சிபிஎஸ்இ டெர்ம் 1 முடிவை எவ்வாறு சரிப்பார்ப்பது


* சிபிஎஸ்இ டிஜிலாக்கர் மற்றும் உமாங் ஆகியவை மொபைல் பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் மார்க்ஷீட்களை வழங்குகிறது.


* உள்நுழைவு சான்றுகள் மாணவர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.


* மாணவர்கள் தங்கள் சிபிஎஸ்இ போர்டு வகுப்பு 10, 12 தேர்வு முடிவுகள் 2022ஐ அணுகலாம் - டிஜிலாக்கர் அல்லது உமாங் - ஆகிய மொபைல் பயன்பாடுகளில் உள்நுழைந்து மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.


சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என யுஜிசி பரிந்துரை
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என்று  அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR