இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஆகியவை அடுத்த கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்கத் தொடங்கும் என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


"தாய் மொழியில் தொழில்நுட்பக் கல்வியை, குறிப்பாக பொறியியல் கல்வியைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இது அடுத்த கல்வியாண்டிலிருந்து துவங்கும். அதற்காக ஒரு சில IIT மற்றும் NIT-க்கள் பட்டியலிடப்படுகின்றன" என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தாய்மொழியில் பொறியியல் கல்வி என்பது பல மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலத்தில் போதுமான பரிச்சயம் இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் சேராமல் விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.


கூட்டத்தில், தேசிய கல்வி நிறுவனம் (NTA) பள்ளி கல்வி வாரியங்களின் தற்போதைய சூழ்நிலையை மதிப்பிட்ட பிறகு நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைப் பற்றி தீர்மானிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்


"கூட்டத்தில், அனைத்து உதவித்தொகைகளும், ஃபெலோஷிப்களும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு UGC பணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


2021 முதல் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, ஒன்பது பிராந்திய மொழிகளில் JEE Main தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் NTA அறிவித்திருந்தது.


இருப்பினும், JEE Advanced தேர்வு பிராந்திய மொழியில் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை வெளியிடுவதற்கு முன்னர், பள்ளி கல்வி நிலையை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது. ஏனெனில் CBSE மற்றும் CISCE போன்ற தேசிய வாரியங்கள் உட்பட பல வாரியங்கள் COVID-19 தொற்றால் எற்பட்ட நிலைமை காரணமாகவும் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாலும் தங்கள் தேர்வு பாட திட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளன.


ALSO READ: CBSE 10, 12 ஆம் வகுப்பு 2021 பொதுத் தேர்வுகள் தாமதிக்கப்படுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR