புதுடெல்லி: செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டபடி பொறியியல் நுழைவு தேர்வுகள் (ஜேஇஇ) மற்றும் மருத்துவ நுழைவு தேர்வை (நீட்) ஆகியவற்றை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு நாளும் அதை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வளர்ந்து வரும் நிலையிலும், அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, JEE, NEET நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆறு அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். 


NEET செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது, பொறியியல் நுழைவுத் தேர்வு JEE-Mains செப்டம்பர் 1-6 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 9.53 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ-மெயின் (JEE Main) தேர்வு எழுதுகின்றனர். 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். முன்னதாக, தொற்றுநோயைத் தொடர்ந்து இரண்டு முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தெரிகிறது.


பரீட்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இடைவெளி விட்டு அமர வைத்தல், ஒரு அறையில் குறைவான மாணவர்களை எழுத வைப்பது மற்றும்  நுழையும் போதும் வெளியேறும் போதும், போதிய இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 


இந்நிலையில் தேர்வு ஹாலிற்குள் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ!!


தேர்வு ஹாலிற்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்.


1. தனிப்பட்ட ட்ரான்ஸ்பேரண்டான தண்ணீர் பாட்டில்,


2. தனிப்பட்ட ஹாண்ட் சானிடைஸர் (50 மில்லி)


3. ஒரு சாதாரண ட்ரான்ஸ்பேரண்ட் பால் பாயிண்ட் பேனா


4. அட்மிட் கார்டு மற்றும் செல்ஃப் டிக்ளரேஷன் (அண்டர்டேக்கிங்). இரண்டும் என்.டி.ஏ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு நிரப்பப்படிருக்க வேண்டும். (A4 அளவு தாளில் தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்).


5. இன்விஜிலேட்டர் முன்னிலையில் வருகை தாளில் ஒட்டுவதற்காக அட்மிட் கார்டில் ஒட்டப்பட்ட அதே புகைப்படத்தின் கூடுதல் நகல்


தேர்வு ஹாலிற்குள் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்.


1. மின்னணு சாதனங்கள் - மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள், இயர்போன்கள், ஹெட்ஃபோன்கள், பேஜர்கள் போன்றவை.


2. கைப்பைகள்: தேர்வு ஹாலிற்குள் எந்தவிதமான பைகள் அல்லது சாமான்களை எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி இல்லை.


3. ஸ்டேஷனரி பொருட்கள்: பேனாக்கள், பென்சில்கள், ரப்பர், ஸ்கேல் போன்ற எந்தவிதமான பொருட்களையும் கொண்டு வர மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரீட்சைக்கு முன்னர் பரீட்சை மையங்களிலிருந்து தேவையான எழுதுபொருட்ககள் அவர்களுக்கு வழங்கப்படும்.


4. எந்தவிதமான நகைகள் அல்லது ஆபரணங்களை அணிய மாணவர்களுக்கு அனுமதி இல்லை.


5. மாணவர்கள் தேர்வு ஹாலில் எதையும் குடிக்கவோ, புகைக்கவோ, சாப்பிடவோ முடியாது. தேநீர் மற்றும் காபி ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் என்றால் தங்கள் மருந்து மற்றும் தண்ணீரை கொண்டு வரலாம்.


6. மாணவர்கள் அனைவரும் ட்ரஸ் கோடை (Dress Code) பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். தடிமனான ஷூ அல்லது  காலணிகள்   மற்றும் பெரிய பட்டன்கள் கொண்ட ஆடைகள் அனுமதிக்கப்படாது.


மேலும் படிக்க | 2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, NPR சாத்தியமில்லை: மத்திய அரசு