தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டில் உள்ள குடிமக்களின் விபரம் கொண்ட பதிவேடாகும். இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்கள் வசித்துவந்த அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அவ்விடத்தில் வசிக்கும் வாய்ப்பு, எண்ணமுள்ளவர்களை அப்பகுதியில் வசிப்பவராகக் கணக்கில் கொண்டு, அவர்களது பெயர் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
மத்திய அரசு, முன்னதாக இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டெம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணியையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
ஆனால், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அது தொடர்பான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த பணி 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா?
தற்போதுள்ள சூழ்நிலையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு ஆண்டு தாமதமானால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை எனவும் அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு பணியில், சுமார் 30 லட்சம் ஊழியர்கள் ஈடுபவார்கள். உலகிலேயே மிகப்பெரிய நிர்வாகரீதியான, புள்ளியியல் சார்ந்த பணியாகும். இதில் பணியில் உள்ள ஊழியர்கள் நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்று வீடுகளில் கணக்கெடுப்பை நடத்துவார்கள்.
தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையில், அரசு மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கவே விரும்புகிறது.
மேலும் படிக்க | இந்திய பண்பாட்டை வெளிப்படுத்தும் பொம்மைகள் தயாரிக்க பிரதமர் வலியுறுத்தல்..!!