JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ!!

JEE Main 2020 தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும். இந்த ஆண்டு தேர்வு கணினி சார்ந்ததாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 08:31 PM IST
  • JEE Mains தேர்வுகள் COVID-19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்படும்.
  • JEE Main 2020 தேர்வின் ஷிஃப்டுகள் எட்டிலிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
  • ஒரு ஷிப்டில் 660 மையங்களில் கிட்டத்தட்ட 85000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்.
JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ!! title=

புதுடெல்லி: JEE Main 2020 தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும். இந்த ஆண்டு தேர்வு கணினி சார்ந்ததாக இருக்கும், மேலும் இது COVID-19வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்படும்.

ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு கணினிக்கான இடம் காலியாக இருக்கும். COVID-19 தொற்றுநோயை அடுத்து மையங்களின் எண்ணிக்கையும் 570 லிருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

JEE Main 2020 தேர்வின் ஷிஃப்டுகள் எட்டிலிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இது தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அட்டவணையின்படி நடத்தப்படும். ஷிஃப்டுகளில் ஏற்பட்டுள்ள எண்ணிக்கையின் அதிகரிப்பு ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட்களில் தேர்வுகள் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

ALSO READ: JEE, NEET 2020: மருத்துவ, பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் என்ன ஆகும்..!!!

ஒரு ஷிப்டில் 660 மையங்களில் கிட்டத்தட்ட 85000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இருக்கும்

அடுத்த கல்வியாண்டிற்கான (2020-2021) NIT-க்கள், IIT-க்கள் மற்றும் பிற மைய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI-க்கள்) போன்றவற்றில் இளங்கலை பட்டப்படிப்புல் சேருவதற்காக NTA மூலம் JEE Main 2020  தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

ALSO READ: JEE, NEET 2020 தேர்வு உள்ள நிலையில் Unlock 4 தொடர்பான முக்கிய தகவல்கள்...!!!

Trending News