JEE Main 2021 Result Date: தேசியத் தேர்வு ஆணையமான NTA விரைவில் JEE Main 2021 தேர்வின் முடிவுகள் மற்றும் ஆன்சர் கீயையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் பிப்ரவரியில் நடந்த 2021 ஆம் ஆண்டின் JEE Main தேர்வுக்கான விடைகளின் ஆன்சர் கீயை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NTA இந்த தேர்வுக்கான முடிவுகளை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கக்கூடும். முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை NTA Jee-யின் அதிகாரப்பூர்வ தளமான jeemain.nta.nic.in –ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


பிப்ரவரி 23, 24, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வில் சுமார் 95 சதவீத மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு, JEE Main தேர்வுகள் நான்கு கட்டங்களாக (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே) நடைபெறுகிறது. இந்த செய்தியை முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்தார்.


இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். 100 சதவிகிதத்திற்கான மதிப்பெண் 295 ஆக இருக்கும் என இவர்களில் சிலர் கருதுகிறார்கள். "ஒருவருக்கு 90 பர்சண்டைல் வர, 300-க்கு 100 எடுக்க வேண்டி இருக்கக்கூடும்” என அதிகாரிகள் கருதுகிறார்கள்.


ALSO READ: அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!


பிப்ரவரியில் நடந்த JEE Main தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் மார்ச் மாத அமர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். மார்ச் மாத தேர்வுகள் மார்ச் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய நான்கு நாட்களில் 2 ஷிப்டுகளில் நடத்தப்படும். முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்கும்.


JEE Main 2021 தேர்வுகள் இவ்வாண்டு கொரோனா தொற்று காரணமாக நான்கு முறை நடைபெறுகின்றன. எனினும், JEE Advance தேர்வுகள் ஒரு முறை மட்டுமே நடைபெறும். JEE Main 2021 தேர்வுகளின் நான்கு அமர்வுகளும் நடந்தபின்னர், இதற்கான தர வரிசைப் பட்டியல் (Rank List) அறிவிக்கப்படும்.   


விரிவான தகவலுக்கு, வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ALSO READ: JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR