JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்

JEE Main 2021 க்கு ஆஜராக விரும்பும் மாணவர்கள் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 03:06 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக JEE Main 2021 தாமதமாகலாம்.
  • இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
  • தொற்று காரணமாக தேர்வுக்கான பதிவு தாமதிக்கப்படலாம்.
JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள் title=

பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வான கூட்டு நுழைவுத் தேர்வு, JEE Main 2021 க்கான பதிவு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாமதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜனவரி மற்றும் ஏப்ரல் JEE தேர்வுகளுக்கான பதிவு தாமதமாகலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் JEE Main 2021 க்கு ஆஜராக விரும்பும் மாணவர்கள் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

JEE Main 2021 தெர்வுகளில் வழக்கம் போலவே BE/B.Tech. B.Arch மற்றும் B.Planning போன்ற பல்வேறு பாட திட்டங்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிபிடத்தக்கது.

ALSO READ: ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு: 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

JEE Main 2021 தேர்வுக்கான தற்காலிக அட்டவணை இங்கே:

JEE Main 2021 பதிவு தேதி- 2020 நவம்பர் இறுதி

பதிவு முடிவு- 2020 டிசம்பர் 1 வது வாரம்

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்- 2020 டிசம்பர் முடிவு

JEE Main 2021 அட்மிட் கார்டுகள் - ஜனவரி 20, 2021

JEE Main 2021 தேர்வு- ஜனவரி 2 வது வாரம்

JEE Main 2021-க்கான பதிவு செயல்முறை:

Step 1: JEE Main இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்

Step 2: முகப்புப்பக்கத்தில், JEE Main-க்கான ‘Application Form’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Step 3: விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப படிவ எண் வழங்கப்படும். எதிர்கால பயன்பாட்டிற்கு இது தேவைப்படலாம் என்பதால் இதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

Step 4: பதிவு படிவத்தை நிரப்பவும்.

Step 5: ‘Submit’-ஐ கிளிக் செய்யவும்.

Step 6: உங்கள் புகைப்படம் மற்றும் கேட்கப்பட்ட பிற ஆவணங்களை பதிவேற்றவும்.

ALSO READ: India Post Recruitment 2020: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?.. 2582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News