போபால்: மத்தியப் பிரதேசத்தைச் (Madhya Pradesh) சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chauhan) அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தொகுதி அல்லது மாவட்ட தலைமையகத்திலிருந்து தேர்வு மையத்திற்கு இலவச பயண ஏற்பாடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்த வசதியைப் பெற ஆர்வமுள்ள மாணவர்கள் 181 என்ற எண்ணை அழைத்தோ அல்லது https/mapit.gov.in/covid-19 என்ற போர்ட்டல் மூலமாகவோ ஆகஸ்ட் 31 முதல் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் சௌஹான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Government of Madhya Pradesh is arranging free-of-cost transport facility for students appearing in JEE/NEET exam. Arrangements will be done from Block HQ & District HQ of exam centre. Examinees can call at 181 or can apply by clicking on https://t.co/gFyNJAUyqh from August 31.
— Office of Shivraj (@OfficeofSSC) August 30, 2020
'' JEE / NEET தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மத்திய பிரதேச அரசு இலவசமாக போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. தேர்வு மையத்தின் தொகுதி தலைமையகம் மற்றும் மாவட்ட தலைமையகத்திலிருந்து ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்வு எழுதும் மாணவர்கள் ஆகஸ்ட் 31 முதல் 181 என்ற எண்ணில் அழைத்தோ அல்லது http://mapit.gov.in/covid-19 -ல் கிளிக் செய்தோ இதற்கு விண்ணப்பிக்கலாம்” என்று மத்திய பிரதேச முதல்வர் எழுதியுள்ளார்.
ALSO READ: JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ!!
இருப்பினும், மத்தியப் பிரதேசம், தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இப்படிப்பட்ட உதவிகளைச் செய்யும் முதல் மாநிலம் அல்ல. சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா முதல்வர்களும் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவுமாறு அதிகாரிகள் மற்றும் அவர்களது கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் JEE மற்றும் NEET தேர்வுகளை நடத்துவதில், மாணவர்களின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) வியாழக்கிழமை தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முக்கியத்துவம் அளித்தே தேர்வுகள் இப்போதே நடத்தப்படுகின்றன என்றார் அவர்.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை (NTA) செப்டம்பர் 1-6 க்கு இடையில் JEE Mains தேர்வுகளையும் செப்டம்பர் 13 அன்று NEET தேர்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ALSO READ: JEE, NEET 2020 தேர்வு உள்ள நிலையில் Unlock 4 தொடர்பான முக்கிய தகவல்கள்...!!!