நியூடெல்லி. அரசு வேலைகளைத் தேடும் இளம் விண்ணப்பதாரர்கள் விமான நிலைய ஆணையத்தில் விண்ணப்பிக்க ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை 15 அக்டோபர் 2022 முதல் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான aai.aero ஐப் பார்த்து மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். இது தொடர்பான, ஆட்சேர்ப்பு விளம்பரம் 12 அக்டோபர் 2022 அன்று அதிகாரபூர்வமாக வெளியானது. வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படி, மொத்தம் 55 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கிவிட்டது.
 
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) பல்வேறு துறைகளில் மூத்த உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். உத்தியோகபூர்வ மொழி, மனித வளம், செயல்பாடுகள், மின்னணுவியல் மற்றும் நிதித் துறை ஆகியவற்றில் 32 மூத்த உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும். அதேசமயம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 23 பணியிடங்களுக்கு, தீயணைப்பு சேவைகள் துறையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்


AAI ஆட்சேர்ப்பு 2022: முக்கியமான விஷயங்கள்


விண்ணப்ப செயல்முறையை ஆன்லைனில் மட்டுமே முடிக்க முடியும்.
விண்ணப்ப செயல்முறை 15 அக்டோபர் 2022 முதல் தொடங்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14 நவம்பர் 2022 ஆகும்.
பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் பணியாளர், பெண்கள் என சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
30 செப்டம்பர் 2022 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு பெற தகுதியுள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.


மேலும் படிக்க | EPFO News: PF UAN எண் மறந்துவிட்டதா?


AAI ஆட்சேர்ப்பு 2022: அத்தியாவசியத் தகுதி


ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 12வது (10+2) வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் / ஃபயர் பிரிவில் டிப்ளமோ (10+3) படித்திருக்க வேண்டும். 


மூத்த உதவியாளர் பணியிடங்களுக்கு, இரண்டு வருட அனுபவத்துடன் தொடர்புடைய பாடம்/வர்த்தகத்தில் பிஜி/பட்டதாரி/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.


மேலும் படிக்க | 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; வருவாய்த் துறையில் வேலை வாய்ப்பு


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ