தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி, சில மாவட்டங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளன. அதற்கான முழு விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதாவது,
கோயம்புத்தூர் – 3 பணியிடங்கள்
கிருஷ்ணகிரி – 27 பணியிடங்கள்
தருமபுரி – 22 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 31 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் படித்தல், எழுதுதல் திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல், எழுதுதல் திறனறித் தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022வரையிலும் நடைபெற உள்ளது.
உதவியாளர் வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க; கேஸ் சிலிண்டர் பற்றிய புதிய விதி வந்தாச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ