அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி முடிவத்தவர்கள் தங்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆண்டுக் கணக்கில் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கான ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இது தற்காலிக பணியிடம் ஆகும். இந்தப் பணிக்காக தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அணுப்ப வேண்டும். 

 

வேலை வாய்ப்பு அறிவிப்பு

 

பணியிடம்; நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை

பணியின் பெயர்; தட்டச்சர் (தற்காலிக பணியிடம்)

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 22 ( Typist - 15, Steno Typist Grade III - 07)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09/09/2022

 

ஊதிய விவரம்

 

Typist; Rs.19,500/- to Rs.62,000/-

Senior Typist Grade III; Rs.20,600/- to Rs.65,500/-

 

கல்வித் தகுதி

 

Typist; 10th Pass to Tamil or English Typist

Senior Typist Grade III; Type Writing In 2Years Experience

 

வயது; 01/07/2022 தேதியின் படி குறைந்த பட்சமாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

 

விண்ணப்ப கட்டணம்; விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

 

காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

 

விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து உரிய கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றுடன், சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் கொடுத்து ‘ முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு 09-09-2022 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

 

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் முன் விண்ணப்பதார்களுக்கான அறிவுரையை தவறாது படித்து கொள்ள வேண்டும்.

 

கூடுதல் விவரங்களுக்கு; ttps://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf இந்த லிங்கில் தெரிந்து கொள்ளவும்.

 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ