இப்படி கலாய்க்கிறீங்களே என மாணவர்களின் குடும்பத்தை புலம்ப வைக்கும் நீட் ட்ரோல்கள்

NEET UG Result 2022: நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கலக்கும் சில ட்ரோல்கள், டென்சனை குறைப்பதாக இருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2022, 08:48 PM IST
  • நீட் நுழைவுத்தேர்வு வெளியாக இருக்கிறது
  • முடிவுக்கு முன்பே சமூக ஊடகங்களில் வைரலாகும் ட்ரோல்கள்
  • இப்படி கலாய்க்கிறீங்களேப்பா என்று புலம்பும் மாணவர்களும் பெற்றோர்களும்
இப்படி கலாய்க்கிறீங்களே என மாணவர்களின் குடும்பத்தை புலம்ப வைக்கும் நீட் ட்ரோல்கள் title=

வைரலாகும் ட்ரோல்கள்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகயுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை வெளியாகிறது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் முடிவு மற்றும் அதற்கான எதிரொலி குறித்து மீம்களும் ட்ரோல்களும் வைரலாகின்றன.

ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் நடந்தது.  

மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்தது. அதற்கேற்ப நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டன. நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கலக்கும் சில ட்ரோல்கள்

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News