TN Assembly: NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது
இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது
சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் மசோதாவை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு பா.ஜ.க தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன. முதலில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அண்ணா திமுகவும் இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தது.
Also Read | நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது
முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக நீட் நுழைவுத்தேர்வு இருக்கிறது; மாநிலப் பொதுசுகாதாரக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது. இதற்கு முடிவுகட்டி, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்ளும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதாக தெரிவித்தார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய யுஜி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று நீட் விலக்க மசோதா கூறுகிறது,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை திமுக அமைத்தது.
Also Read | நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR