Neet bill: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்

இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2021, 10:01 AM IST
  • நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா
  • தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்
  • நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது
 Neet bill: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்  title=

சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளாக தமிழகத்தில் நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 14 மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : 

1. நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன்  குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகிறது,

2. கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது

3. கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது

4, நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது 

5. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ | நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News