புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் NRI இந்தியர்கள், கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு NEET தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்களின் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National eligibility cum entrance test (NEET))  தேர்வு மையங்களை வெளிநாடுகளில் அமைப்பது அல்லது தேர்வுகளை ஒத்திவைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, இதே போன்ற ஒரு மனு முன்னதாக கேரள உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் நீட் தேர்வுகளுக்கான மையங்களை ஒதுக்க வேண்டும் அல்லது கோவிட் தொற்றுநோயின் தாக்கம் முடியும்வரை தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய மற்றும் தேசிய தேர்வு முகமை என்.டி.ஏவுக்கு (National Testing Agency (NTA)) அறிவுறுத்துமாறு கோரிய அந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Read Also | Pierce Brosnan: ஜேம்ஸ் பாண்டாக தொடர்ந்து நடிக்கவில்லை என்பதால் வருத்தமில்லை


கத்தாரில் உள்ள கேரள முஸ்லீம் கலாச்சார மையத்தின் (Kerala Muslim Culture Centre, Qatar) பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ் (Abdul Azees) என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்திருந்த NTA மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் MCI, வெளிநாட்டில் நீட் தேர்வுகளுக்கு தேர்வு மையங்களை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தன.


2020-21 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏற்கனவே அறிவித்தவாறு ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. போட்டித் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் இப்போது இருக்கும் மனநிலையில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.