நீட் யுஜி 2022 முடிவு தேதி: நீட் யுஜி  2022 தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. நீட் யுஜி  2022 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விரைவில் வெளியிடவுள்ளது. ஊடக அறிக்கையின்படி, இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை வெளியிடலாம். இந்த முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமை நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான NEET UG 2022 ஐப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் யுஜி 2022 விடைத் திறவுகோல் முடிவு வருவதற்கு முன்பே தேர்வு முடிகள் வெளியிடப்படும்
நீட் தேர்வு முடிவு தேதி மற்றும் நேரம் என்டிஏ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதே நேரத்தில், தேர்வின் முடிவை வெளியிடுவதற்கு முன்பு என்.டி.ஏ நீட் யுஜி 2022 விடைக்குறிப்பை வெளியிடும்.


மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்


இதற்கிடையில் நீட் யுஜி 2022 இன் தேர்வு கடந்த 17 ஜூலை 2022 அன்று நடத்தப்பட்டது. 18.72 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர், அவர்களில் 95 சதவீத மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அதிகபட்சமாக ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மேற்கு சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


இந்த ஸ்டெப்ஸ் மூலம், நீங்கள் நீட் யுஜி 2022 தேர்வு முடிவு பதிவிறக்கம் செய்ய முடியும்.


ஸ்டெப்  1. முதலில், மாணவர்கள் என்டிஏ நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in க்குச் செல்லவும்.


ஸ்டெப் 2. இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நீட் யுஜி 2022 முடிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3. இப்போது தேவையான நற்சான்றிதழ்களை பூர்த்தி செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 4. இதற்குப் பிறகு உங்கள் முடிவு உங்கள் திரையில் தோன்றும்.


ஸ்டெப் 5. நீங்கள் உங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து எதிர்காலத்திற்காக உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ