புதுடெல்லி:  தங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை டிசிஎஸ் நிறுவனம் பெருமளவில் பணியமர்த்தியுள்ளதாகவும், சுமார் 70% ஆஃபர் லெட்டர்களை மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது என்று இணையதளம் எட்டெக் பிராண்ட் ப்ரெப்இன்ஸ்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 PrepInsta Prime நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவர்களை, 475 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பணியமர்த்தியுள்ளன, இவர்களின் அதிகபட்ச சம்பளம், ஆண்டுக்கு ரூ 47 லட்சத்தை எட்டும் என்று அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எட்டெக் பிராண்ட் ப்ரெப்இன்ஸ்டா, வேலை வாய்ப்புத் தயாரிப்புக்கான இணையதளம், அக்டோபர் 2022 இல் 18857 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகிறது. "PrepInsta வேலை வாய்ப்புகளில் செய்த பதிவுகளுக்கு கூடுதலாக, இந்த மாதம் சராசரியாக ரூ. 7.2 LPA பேக்கேஜ் கொண்ட மைல்ஸ்டோன் பேக்கேஜ்களையும் கொண்டு வந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - அரசு வேலை ரெடி


"செப்டம்பர் 2022 க்கான PrepInsta வேலை வாய்ப்புகளில் 70% கணிசமான அதிகரித்துள்ளது. மேலும், 5873 க்கும் மேற்பட்ட PrepInsta மாணவர்கள் TCS, SAP, Wipro, Cognizant மற்றும் CapeGemini போன்ற நிறுவனங்களால் வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபரில் TCS தோராயமாக 70% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நியமன கடிதத்தை அனுப்பியிருக்கிறது. PrepInsta மாணவர்களுக்கான  கடிதங்கள், Infosys, Cognizant, Accenture மற்றும் பிற சேவை சார்ந்த நிறுவனங்கள், தங்களின் வளாகத்தில் ஆட்சேர்ப்பு இயக்ககங்களுக்கான பணி நியமன கடிதங்களை விநியோகித்துள்ளன. மேலும் அவை விரைவில் வளாகத்திற்கு வெளியேயும் இந்த நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


"பொதுப்படையாக சொன்னால், வேலை வாய்ப்பு சீசன் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, மேலும் கிட்டத்தட்ட எல்லா அளவுருக்களிலும் நாங்கள் இதுவரை அதிக சாதனைகளைப் படைத்துள்ளோம்" என்று PrepInsta இன் இணை நிறுவனர் மற்றும் CMO மணீஷ் அகர்வால் கூறினார்.


“ஆழமான தொழில் தொடர்புகளை வளர்ப்பதற்கும், அதன் மூலம் தொழில்துறை தேவைகளுடன் ஒத்திசைவான திறன்களைப் பெறுவதில் எங்கள் மாணவர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் கொடுத்த பயிற்சியின் விளைவு இது. மாணவர்கள் தங்கள் கனவு வேலையைக் கண்டறிய திறமைகளை உருவாக்குவதற்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்ததற்காக முழு PrepInsta குழுவிற்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று PrepInsta இன் இணை நிறுவனர் மற்றும் CMO மணீஷ் அகர்வால் பாராட்டுகளை தெரிவித்தார்.


மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ