ஆர்ஆர்சி வட மத்திய ரயில்வே பிரயாக்ராஜ் கட்டுமான அமைப்பானது, சிவில் இன்ஜினியரிங் துறைகளில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் RRC வட மத்திய இரயில்வே பிரயாக்ராஜின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வேயில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களுக்கு இது சரியான தருணம். RRC வட மத்திய ரயில்வே பிரயாக்ராஜ் நிர்மான் சங்கதன், பல பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்  20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் RRC வட மத்திய இரயில்வே பிரயாக்ராஜின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrcpryj.org -க்குச் சென்று விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 18 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். 


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான ஆதார்: இந்த விஷயங்களில் கவனம் தேவை


விண்ணப்ப அறிவிப்பு 


1. விண்ணப்பத்தின் தொடக்க தேதி - 8 ஏப்ரல் 2022
2. விண்ணப்பிக்க கடைசி தேதி - 18 ஏப்ரல் 2022
3. விண்ணப்பக் கட்டணம் - 18 ஏப்ரல் 2022


வயது வரம்பு


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தகுதி


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சிவில் இன்ஜினியரிங்கில் மூன்றாண்டு டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும் படிக்க | கூடிய விரைவில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை


விண்ணப்பக் கட்டணம்


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மறுபுறம், SC, ST, EWS பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.


சம்பளம்


ஆர்.ஆர்.சி., சார்பில், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதம், 25 ஆயிரம் ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை


முதலில் விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள், அதன் பிறகு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR