கூடிய விரைவில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வழங்கிய கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2022, 02:01 PM IST
  • மூத்த குடிமக்கள் மீண்டும் விலக்கு பெறலாம்
  • சமூக நீதி அமைச்சகம் ரயில்வேயிடம் தகவல்களை கேட்டுள்ளது
  • மூத்த சிட்டின்கள் லோயர் பெர்த்
கூடிய விரைவில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை title=

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்து மீண்டும் கருத்துகள் வர தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ரயில்வேயிடம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தகவல் கேட்டுள்ளது. அதன்படி, கோவிட்-19 அச்சுறுத்தல் தணிந்து, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நாட்டில் இயல்பாகிவிட்ட நிலையில், மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணச் சலுகையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் இந்த அழுத்தத்தைக் குறைக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தீவிரம் காட்டி வருகின்றது. அத்துடன் ரயில்வேயில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு சலுகைகளைப் பெறவும் அரசு முயற்சிக்கிறது.

ரயில்வேயில் இருந்து தகவல் கோரப்பட்டது
ஒரு அறிக்கையின்படி, தற்போது, ​​நாட்டில் இதுபோன்ற கோரப்படாத தொகை 1.25 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது, மூத்த குடிமக்கள் தொடர்பான பல திட்டங்கள் தற்போது வரை இந்த நிதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்கள் தொடர்பான அமைப்புகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இது தொடர்பாக இந்திய ரயில்வேயிடம் தேவையான தகவல்களைக் கேட்டுள்ளது, அதன்பிறகு மத்திய அரசு அடுத்த உத்தியில் செயல்படும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! உயர்கிறது ரயில்வே கட்டணம் 

இந்த சேவை 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது
கோவிட் தொற்றுநோய்களின் போது மோசமான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் உட்பட மூன்று வகைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் கட்டணச் சலுகையை ரயில்வே நிறுத்தியது. இருப்பினும், இந்த வசதி எப்போது திரும்பப் பெறப்படும் என்பது குறித்த தெளிவு இல்லை. ஆனால் மூத்த குடிமக்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்
இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களவையில் கூறியதாவது: ஏறக்குறைய ஏழு கோடி மூத்த குடிமக்கள் இரண்டு ஆண்டுகளாக எந்த விலக்குமின்றி ரயில்களில் பயணம் செய்கிறார்கள். எனவே அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் விலக்கு இல்லாமல் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.

மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News