விழுப்புரம்: தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதால், ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளதாகவும் தமிழக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி


இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்றாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றம் விளக்கம் தெரிவித்தார்.


அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பும், அவர் அளித்த தகவல்களையும் நேரிடையாக பார்க்கலாம்.



தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தகவல்களின் சராம்சம்:


மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக பிப்ரவரி 1ம் தேதியன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.


கல்லூரிகள் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி 1, 3, 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் மாணவர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவுபடுத்தியுள்ளார்.


ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


ALSO READ | தமிழகத்தில் ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு - முழுவிவரம்


தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் இருமொழி கொள்கை தான் பின்பற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளதாக தமிழக உயர் கல்வி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். 


மாணவர்கள் விருப்பப்பட்டால், மூன்றாவது மொழியினை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம் என அமைச்சர் கூறினார். 


மும்மொழி கொள்கையை பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுறுத்தும் மத்திய அரசு, அதே அறிவுறுத்தலை பின்பற்றுமா என்றும் கேள்வி எழுப்பினார்.


அதாவது, மூன்றாவது மொழியாக வடமாநிலங்களில் தென் மாநிலங்களின் மொழியை பயிற்றுவிக்க ஆளுநர் பரிந்துரைப்பாரா என்ற கேள்வியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எழுப்பினார்.


ALSO READ | கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR