தமிழகத்தில் காலியாக உள்ள 5,529 குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட டி.என்பி.எஸ்சி முடிவெடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வு மற்றும் வினா குறித்து தேர்வர்களிடையே பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அதற்கான விளக்கத்தை டிஎன்பிஎஸ்சி கொடுத்துள்ளது. அதில், குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் விடைகள் எதுவும் தவறானவை அல்ல என விளக்கமளித்துள்ளது.இந்த வார இறுதிக்குள் விடைத் தொகுப்பு வெளியிடப்படும் எனக் கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி, அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 5 நாட்களுக்குள் விளக்கத்துடன் டிஎன்பிஎஸிக்கு அனுப்பலாம் எனக் கூறியுள்ளது. 


மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!


புதிய நடைமுறைப்படி நடத்தப்பட்ட முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வு என்பதால், சிறிது அச்சத்துடனேயே தேர்வர்கள் தேர்வை எதிர்கொண்டனர். அதில் தமிழ் மற்றும் கணக்கு பாடத்தின் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், அறிவியல் மற்றும் பொது அறிவியல் சற்று கடினமானதாக இருந்ததாகவும் கூறியுறள்ளனர். யூனிட் 8 உள்ளிட்டவை புதிய சிலபஸ் என்பதால், அந்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்வி எப்படி வரும்? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். 


வழக்கமாக குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் கட் ஆப் மதிப்பெண்கள் 170க்கும் மேல் இருக்கும் நிலையில், இந்த முறை அதற்கும் குறைவாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் 5,529 காலிப் பணியிடங்கள் மட்டுமே இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதியிருக்கின்றனர். இதனால்,அவற்றுக்கு ஏற்ப தேர்வர்களை தேர்வு செய்ய வேண்டிய கடமை இருப்பதால், அதனை மனதில் வைத்தே டிஎன்பிஎஸ்சி கட்ஆப் நிர்ணயிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வார இறுத்திக்குள் கட்ஆப் தொடர்பான சில கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | TNPSCல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - முழு விபரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR