பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!

2022ம் ஆண்டிற்கான எஸ்பிஐ-ன் கிளார்க் பதவிக்கான போட்டித்தேர்வில் பயிற்சி இல்லாமல் தேர்ச்சி பெறவேண்டுமெனில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 09:05 PM IST
  • இந்தியா முழுவதும் போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு தேர்விற்கும் பலர் தேர்வு எழுதுகின்றனர்.
  • சில தேர்வுகள் மிகவும் கடினமாகவே உள்ளது.
பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!  title=

கடினமான வங்கி தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் எஸ்பிஐ-ன் கிளார்க் பணிக்கான தேர்வு மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.  2021 ஆம் ஆண்டில், 36 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.  இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் இந்த பதவிகளுக்கு போட்டிபோட காத்திருக்கின்றனர்.   இந்த தேர்வு மூன்று கட்டங்களைக் கொண்டிருக்கும்.  கட்டம்-I அல்லது ஆன்லைன் ஆப்ஜெக்டிவ் வகை தேர்வின் கால வரம்பு 1 மணி நேரம் 100 மதிப்பெண்கள். கட்டம்-II ஆனது 2 மணி நேரம் 40 நிமிட கால வரம்புடன் 200 மதிப்பெண்கள் கொண்ட ஆன்லைன் தேர்வாக இருக்கும். கட்டம்-III என்பது குறிப்பிட்ட உள்ளூர் மொழியின் தேர்வாக இருக்கும்.  இதற்கென்று பலரும் பிரத்யேகமாக பயிற்சி வகுப்புகள் சென்று தயாராகி வருகின்றனர், இருப்பினும் சிலரால் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லமுடியாது  ஏற்படுகிறது.  பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே இந்த தேர்வை எதிர்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.

மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: ஜூலையில் மீண்டும் டிஏ அதிகரிப்பு, விவரம் இதோ

1. இந்த தேர்வு மட்டுமல்லாது எந்த தேர்வாக இருந்தாலும் அந்த தரவு பற்றிய புரிதல் இருக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.  எனவே தேர்வு முறையை சரியாக புரிந்து கொள்ளுங்கள். முழுமையான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையைப் புரிந்து கொள்ளாமல், படிப்பதற்கு சரியான திட்டத்தை உருவாக்குவது கடிமானதாக இருக்கும்.

2.தேர்வுகளுக்கு தயாராவதற்கு முன்னர் படிப்பை மேற்கொள்ள சில திட்டமிடுதல் அவசியமானது, உங்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்தில், எந்த பாடத்திட்டத்தை படிக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் தெளிவாக திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.  உங்கள் திட்டத்தை வகுக்க மற்றவர்களின் உதவியை நாடாதீர்கள், ஏனெனில் ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று தனித்தனியான படிப்பு சூழல், நேரம் போன்றவற்றை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

3. எந்தவொரு போட்டித் தேர்விலும் வெற்றிபெற ஒழுக்கம் முக்கியம்.  நீங்கள் சீக்கிரம் எழுந்தாலும் அல்லது தாமதமாக தூங்க சென்றாலும், உங்கள் படிக்கும் நேரத்தை மாட்டும் ஒருபோது மாற்றிவிட கூடாது, தினமும் படிப்பதை மட்டும் ஒதுக்கிவிட கூடாது.  தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர கால அட்டவணையை உருவாக்கி அதன்படி தினமும் நீங்கள் படிக்க வேண்டும்.

4. இவ்வளவு பெரிய பாடத்திட்டத்தை, குறுகிய காலத்தில் படித்து முடிப்பது உங்களை சலிப்படையவோ அல்லது சோர்வை ஏற்படுத்துவதாகவோ அமையலாம்.  எல்லாத்தையும் ஒரே நேரத்தில் படித்து முடிக்க நினைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக படிக்க தொடங்குங்கள்.  ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு, அல்லது ஒரு பக்கம் என்று திட்டமிட்டு படியுங்கள், படிக்கும்பொழுது உங்களது முழு கவனமும் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும்.  அதைவிடுத்து படிக்கும் நேரத்தில் மொபைல் நோண்டுவது, சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

exam

5. முந்தைய வருடத்தில் உள்ள மாதிரி கேள்விகளை படித்து அதற்கு பதிலெழுத முயற்சி செய்யுங்கள்.  பழைய கேள்வித்தாள்களில் தேர்ச்சி பெற எண்ணுங்கள், முதலில் கவனமாக கேள்வியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும், மேலும் அதனை எளிதாக்க கேள்வியை சில பகுதிகளாக பிரிக்க வேண்டும்.  கொஞ்சம் கொஞ்சமாக இதுபோன்ற செயல்களை செய்ய பழகுங்கள்.  காலையில் குறைந்தபட்சம் 2 மணிநேரம் அளவுத் தாள்களைத் தீர்க்கவும், மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பகுத்தறிவுத் தாள்களைத் தீர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் வார இறுதி நாட்களில் பொது அறிவு மற்றும் ஆங்கிலம் படிக்கலாம். இது 3-4 மாதங்கள் தொடர்ந்தால், 3-4 மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் காணக்கூடிய முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். நேரம் மற்றும் துல்லியத்தை சரிபார்க்க, ஸ்டாப்வாட்ச் மூலம் காகிதங்களைத் தீர்க்க முயற்சிக்கவும்.

6. 'பயிற்சி ஒரு மனிதனை முழுமைப்படுத்துகிறது' என்கிற பழமொழியை பலமுறை கேட்டிருப்பீர்கள் இது உண்மையான ஒன்று.  நிறைய பயிற்சி செய்ய வேண்டும், முடிந்தவரை சில மாக் டெஸ்ட்களை எழுதி பாருங்கள், வேலைக்குச் செல்பவர்கள் அல்லது வேலை செய்யாதவர்கள் என அனைவரும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மாக் டெஸ்ட்களை எழுதி உங்களை நன்கு தயார்படுத்தி கொள்ளலாம்.

exam

7. நீங்கள் தனியாகப் படிக்கும்போது, ​​​​பலவித விஷயங்களையும் தெரிந்து கொண்டு நல்ல அறிவைப் பெறுகிறீர்கள்.  இணையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி படிக்கும்பொழுது உங்களுக்குள் எலக்கூடிய சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.  பல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் உள்ளன, அவற்றில் எஸ்பிஐ கிளார்க் தேர்வு பற்றிய தகவல்களை நீங்கள் தினமும் பின்தொடர்ந்து பயனடைந்து கொள்ளலாம்.

8. இந்த மதிப்புமிக்க தேர்வுக்குத் தயாராகும் போது நீங்கள் அதிக ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் ஆற்றலைச் செலுத்த வேண்டும்.  அதனால் நீங்கள் சிறந்ததொரு குறிக்கோளுடனும், நேர்மறையான எண்ணங்களால் உங்களை நிரப்பிக்கொண்டும் இருக்க வேண்டும்.  எனவே நீங்கள் சோர்ந்துவிடாமல் முழு நம்பிக்கையுடன் இருந்தால் தான் உங்களால் எந்த தேர்வையும் எளிதில் வெற்றிபெற்றுவிட முடியும். 

9. பெரும்பாலும், பலரும் எஸ்பிஐ கிளார்க் போன்ற வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர்.  நீங்கள் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ சரியாக இல்லாவிட்டால் தேர்வில் சிறப்பாகச் செயல்பட முடியாது. எனவே, உங்கள் ஆரோக்கியமான உணவு உண்ணுதல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.  நீங்கள் எஸ்பிஐ எழுத்தர் தேர்வுக்கான புத்தகங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.  இந்த எழுத்தர் பரீட்சை உங்களை ஒரு பகுதியாக மாற்றப் போகும் வெட்டு-தொண்டைப் போட்டி, இன்று இந்தியாவில் உள்ள கடினமான வங்கித் தேர்வுகளில் ஒன்றாகும்.

மேலும் படிக்க | அதிர்ச்சியில் பெற்றோர்: நோட்டு புத்தகம் உட்பட ஸ்டேஷனரி பொருட்களின் விலையில் 50% வரை உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News