புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், ஏறக்குறைய 7 மாதங்களாக மூடப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் மீண்டும் திறக்க யுஜிசி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும்,  மொத்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் மாணவர்கள் வகுப்பில் இல்லாத வகையில், கல்லூரிகளை நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தவிர அனைத்து பிற பாடங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் (Online classes) தொடரும்


யு.ஜி.சியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் விரும்பினால், அவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்வதை தவிர்த்து விட்டு, வீட்டிலேயே தங்கி ஆன்லைனில் படிக்கலாம். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன், விடுதிகளை திறக்கலாம். விடுதியில், ஒரு அறையில், ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், தங்க அனுமதிக்க முடியாது.


கல்வி வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு முன், மத்திய அரசு (Central Government) அல்லது சம்பந்தப்பட்ட  மாநில அரசு கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்கு அந்த பகுதி பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறுகையில், “கல்வி அமைச்சகம் பல விதமான சவால்களை சமாளித்து வருகிறது. அனைத்து விதமான நிலைகளையும் மனதில் கொண்டு யுஜிசி, பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க புதிய வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு சுகாதார (Health Ministry) மற்றும் குடும்ப நல அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.


கோவிட் -19 (Covid-19)  பரவுவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க மாநில மற்றும் மத்திய பிராந்திய அரசாங்கங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


யுஜிசியின் வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட்ட முடிவில் உள்ள முக்கிய அம்சங்கள்:


ALSO READ | COVID-19: இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை விதித்த சீனா..!!!


- மத்திய அரசின் நிதியுதவி பெற்ற உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க, முதலில் நிறுவனத்தின் தலைவர், நிலைமையை பொறுத்து வகுப்புகள் திறக்க முடிவு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


- மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முடிவின்படி அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் நடத்தப்படும்.


- அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் போன்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான முடிவுகளை சமபந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகள் முடிவெடுக்கலாம்.


- சமூக விலகல் மற்றும் மாஸ்குகள் பயன்பாடு கட்டாயமாக இருக்கும்


- பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி படிப்படியாக வளாகத்தைத் திறக்க வேண்டும்.


- பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கும் திட்டத்தில் நிர்வாக அலுவலகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம்


- ஆராய்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


- முதுகலை மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம், ஏனெனில் ஆராய்ச்சி செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது


- இந்த பிரிவுகளில் தனிநபர் இடைவெளி (Socilal Distancing) மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எளிதில் செயல்படுத்த முடியும்.


- கல்வி என்பது வேலைவாய்ப்புடன் நேரடியாக தொடர்புடையது, இந்த விஷயத்தில் இறுதி ஆண்டு மாணவர்களையும் பாடங்கள் மற்றும் ப்ளேஸ்மெண்ட் தொடர்பான நடவடிக்கைகளுக்காக கலந்தாலோசனை செய்யலாம்.


- கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களுக்கான நடவடிக்கை திட்டத்தையும் வேண்டும். சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் அல்லது விசா பிரச்சினைகள்
காரணமாக பாடத்திட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ALSO READ | பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு எழுதிய பகிரங்க கடிதம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR