COVID-19: இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை விதித்த சீனா..!!!

தற்போதைய தொற்றுநோய் பரவலை சமாளிக்க சீனா இதை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தொற்றுநோய் பரவல் நிலை மாறுவதற்கு ஏற்ப சீனா இது தொடர்பான அறிக்கையை மேலும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 5, 2020, 07:42 PM IST
  • தற்போதைய தொற்றுநோய் பரவலை சமாளிக்க சீனா இதை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • தற்போதைய தொற்றுநோய் பரவல் நிலை மாறுவதற்கு ஏற்ப சீனா இது தொடர்பான அறிக்கையை மேலும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19: இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை விதித்த சீனா..!!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, சீன விசா அல்லது ரெஸிடண்ட் பர்மிட்டுடன் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு சீனா (China) தற்காலிக தடை விதித்துள்ளது என்று சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3, 2020 க்குப் பிறகு விசா வழங்கியவர்கள் சீனாவிற்குள்  (China) வரத் தடை இல்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் (Corona virus)  பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சீன விசா அல்லது ரெஸிடண்ட் பர்மிட்டுடன் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது என்று சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் (India) உள்ள சீன தூதரகம் / துணைத் தூதரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விசா அல்லது ரெஸிடண்ட் பர்மிட் வைத்திருப்பவர்களின், உடல் நிலை தொடர்பான படிவங்களுக்கு ஸ்டாம்ப் செய்து அனுமதி அளிக்கப்படாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சீன இராஜீய துறை விசா, சேவை துறையில் உள்ளவர்களுக்கான விசா, கவுரவ விசா மற்றும் சி விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கு வருகை தரும் அவசரகால தேவை அல்லது மனிதாபிமான அடிப்படையிலான தேவைகள் உள்ள வெளிநாட்டவர்கள், விசா விண்ணப்பத்தை இந்தியாவில் உள்ள சீன தூதரகம் / தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

தற்போதைய தொற்றுநோய் பரவலை சமாளிக்க சீனா இதை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தொற்றுநோய் பரவல் நிலை மாறுவதற்கு ஏற்ப சீனா இது தொடர்பான அறிக்கையை மேலும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியர்களுக்கு Good News.... இனி வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழை பெறலாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News