DMK: தமிழகம் இனி வெல்லும்! AIIMS சரித்திரம் அதை வழிமொழியும்; நாளைய தமிழகம் அதை சொல்லும்
திமுக தலைவரின் ஸ்டாலின் குடும்பத்தினர், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிஜேபியை டிரோல் செய்கின்றனர்
சென்னை: தமிழ்நாடு: சட்டமன்ற தேர்தலில் வெற்றி தெளிவாகி, சிம்மாசனத்தை நோக்கிய பயணம் திமுகவிற்கு தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் இருந்து பல தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிதுக் கொண்டிருக்கின்றனர்.
வெற்றிக் களிப்பில் இருந்தாலும் திமுக அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாகவே இருக்கிறது என்பதற்கான முதல் சாட்சி இது. வெற்றி செய்திகளை பெற்றுக் கொண்டும், தனது கட்சியினருக்கு வாழ்த்துச் செய்திகளையும் பகிர்ந்துக் கொண்ட திமுகவின் அடுத்த அதிரடி கலக்கலாகவே இருக்கிறது.
திமுக தலைவரின் ஸ்டாலின் குடும்பத்தினர், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிஜேபியை டிரோல் செய்கின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி கோலாகலமாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனைப் பணிகள், கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கிறது.
Also Read | Prashant Kishor: அரசியலை தலைமுழுகிவிட்டேன், குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன்
தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட செங்கல் ஒன்றை காட்டி பாஜக மீதான எய்ம்ஸ் விமர்சனங்களை முன்வைத்தது திமுக.
“திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.
Also Read | அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.
எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!
Also Read | அசாமில் ஆளும் கட்சியே சிம்மாசனத்தை கைப்பற்றுகிறது
இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!
ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.
இனித் தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்!
Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR