Tamil Nadu Election Results 2021: அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி பெரும்பான்மையாயை நோக்கி நகர்ந்துள்ளது. ஏறக்குறைய திமுக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது என்பது முன்னிலை நிலவரம் காட்டுகிறது.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 135 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 98 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
திமுக கூட்டணி நிலவரம்:
திமுக: 111
காங்கிரஸ்: 13
விசிக: 2
மதிமுக: 3
அதிமுக கூட்டணி நிலவரம்:
அதிமுக: 84
பாமக: 8
பாஜக: 5
தாமாக: 0
சென்னையில் உள்ள கட்சி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
#WATCH | DMK workers and supporters celebrate outside Anna Arivalayam, the party headquarters in Chennai, as official trends show the party leading.#TamilNaduElections2021 pic.twitter.com/61tbcETHYk
— ANI (@ANI) May 2, 2021
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR