கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் MGR-க்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றும் முதல்வர் பழனிச்சாமி (Edappadi Palaniswami) தெரிவித்துள்ளார். 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலூர் (Vellore) மாவட்டத்தில் பிரசாரம் செய்த அவர், கிருபானந்த வாரியாரின் (Kirubanandha Variyar) பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார். MGR-க்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.


ALSO READ | மருத்துவத் துறைக்கு பெரிய உந்துதல்: பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் EPS


திருமுருக கிருபானந்த வாரியார் ஏறக்குறைய 150 நூல்களைப் படைத்துள்ளார். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி, சொற்பொழிவு வள்ளல், கலைமாமணி, ஞானக்கதிரவன் இன்னும் பல அடங்கும். சமய சொற்பொழிவில் கிடைக்கும் தொகையை ஆலயங்களின் திருப்பணிக்காகப் பயன்படுத்தி மகிழ்ச்சியடைவார். மோகனூரில் 1940 ஆம் ஆண்டு அருணகிரிநாதர் அறச்சாலையை ஏற்படுத்தினார். வயலூர், வடலூர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், சமயபுரம் போன்ற பல ஊர்களில் உள்ளஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார்.


வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு (Katpadi) அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.


கிருபானந்த வாரியார், 1993 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR