மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்ததலை முன்னிட்டு சல்மான் கானின் மெய்க்காப்பாளர் ஷேரா சிவசேனா கட்சியில் இணைந்தார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சல்மான் கானின் மெய்க்காப்பாளரான ஷேரா என்ற குர்மீத் சிங் சிவசேனாவில் இணைந்துள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் குர்மீத் சிங் சிவசேனாவில் இணைந்தார்.



மகாராஷ்ட்ராவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதோடு பிரபலங்களை, தங்கள் கட்சிக்குள்ளும் இழுத்து வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் குர்மீத் சிங் என்கிற சேரா, சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். மும்பையில் பிரபலமான சேரா, பல வருடங்களாக சல்மான் கானின் பாதுகாவலராக இருக்கிறார். 


பால் தாக்கரே 1966 இல் சிவசேனாவை நிறுவியதிலிருந்து, குடும்பத்தின் எந்த உறுப்பினரும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை அல்லது எந்தவொரு அரசியலமைப்பு பதவியையும் வகிக்கவில்லை. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி ஒற்றை கட்ட வாக்கெடுப்பில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.