மேனகா காந்திக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது ஏன்?...
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறாத மேனகா காந்தி, தற்காலிக சபாநாயகராக பொறுப்பு வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறாத மேனகா காந்தி, தற்காலிக சபாநாயகராக பொறுப்பு வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது. அதேவேளையில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்தை பெறுவதிலும் சிக்கல் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமரகா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பிடிதுள்ள அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித் ஷா, முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் நான்கு முறை அமைச்சராக இருந்த மேனகா காந்திக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் புதிய மக்களவையில் மேனகா காந்திக்கு தற்காலிக சபாநாயகர் பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை மேனகா காந்திக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படா பட்சத்தில் சந்தோஷ் கங்காவருக்கு அளிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் மேனகா காந்தி உத்திர பிரதேச மாநிலம் சுல்தான் பூரில் வெற்றிப்பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் முன்னதாக இவரது மகன் வருண் காந்தி நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
68-வயது ஆகும் மேனகா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சித்தி ஆவார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனானா சன்ஜய் காந்தியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.